#WIvsPAK 2வது டெஸ்ட்: இந்த போட்டியிலாவது ஜெயிக்கும் முனைப்பில் களமிறங்கிய பாகிஸ்தான்..! டாஸ் ரிப்போர்ட்

Published : Aug 20, 2021, 08:44 PM IST
#WIvsPAK 2வது டெஸ்ட்: இந்த போட்டியிலாவது ஜெயிக்கும் முனைப்பில் களமிறங்கிய பாகிஸ்தான்..! டாஸ் ரிப்போர்ட்

சுருக்கம்

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.  

பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.

2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. 2வது டெஸ்ட்டிலும் வென்று தொடரை வெல்லும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், 2வது டெஸ்ட்டில் வென்று தொடரை டிரா செய்யும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணி:

கிரைக் பிராத்வெயிட்(கேப்டன்), கீரன் பவல், பானர், ரோஸ்டான் சேஸ், ஜெர்மைன் பிளாக்வுட், கைல் மேயர்ஸ், ஜேசன் ஹோல்டர், ஜோஷுவா டா சில்வா(விக்கெட் கீப்பர்), அல்ஸாரி ஜோசஃப், கீமார் ரோச், ஜெய்டன் சீல்ஸ்.

பாகிஸ்தான் அணி:

இம்ரான் பட், அபித் அலி, அசார் அலி, பாபர் அசாம்(கேப்டன்), ஃபவாத் ஆலம், முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), ஃபஹீம் அஷ்ரஃப், நௌமன் அலி, ஹசன் அலி, ஷாஹீன் அஃப்ரிடி, முகமது அப்பாஸ்.
 

PREV
click me!

Recommended Stories

ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!
அபிஷேக் சர்மா சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய ஹர்திக் பாண்ட்யா..! மின்னல் வேக அரை சதம்!