டி20 உலக கோப்பையில் இந்த 3 வீரர்கள் தான் பட்டைய கிளப்ப போறாங்க..! தினேஷ் கார்த்திக் அதிரடி

Published : Aug 20, 2021, 06:37 PM IST
டி20 உலக கோப்பையில் இந்த 3 வீரர்கள் தான் பட்டைய கிளப்ப போறாங்க..! தினேஷ் கார்த்திக் அதிரடி

சுருக்கம்

டி20 உலக கோப்பையில் எந்த 3 வீரர்கள் மிகச்சிறப்பாக ஆடுவார்கள் என்று தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார்.  

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கவுள்ளது. டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.

இந்நிலையில், இந்த டி20 உலக கோப்பையில் எந்த 3 வீரர்கள் அசத்தப்போகிறார்கள் என்பது குறித்து பேசிய தினேஷ் கார்த்திக், என்னை பொறுத்தமட்டில் நிகோலஸ் பூரன் ஸ்பெஷலான வீரர். அவரது கெரியரை டி20 கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த வீரராகத்தான் முடிப்பார். பேட்டை சுற்றுவதில் கைதேர்ந்தவர் பூரன். வெஸ்ட் இண்டீஸ் இந்த தொடரில் சிரப்பாக செயல்பட பூரனின் பேட்டிங் மிக முக்கியம்.

அடுத்தது மிட்செல் ஸ்டார்க். அவர் சிறப்பாக பந்துவீசினால் ஆஸ்திரேலியா இந்த தொடரில் மிகச்சிறப்பாக செயல்படும். டி20 உலக கோப்பை மாதிரியான மிகப்பெரிய தொடர்களை வெல்ல, எந்த சூழலிலும் கடுமையாக போராடும் வீரர் தேவை. இந்தியாவிற்கு அப்படியான வீரர் தான் ஹர்திக் பாண்டியா. பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே அசத்தக்கூடிய வீரர் ஹர்திக் பாண்டியா. அவர் ஆடுவதை நான் ரசித்து பார்ப்பேன் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs WI: 250 ரன் அடிச்சும் தோத்துட்டோமே.. இந்திய பவுலிங் கோச்சை விளாசித் தள்ளிய ஜாம்பவான்!
Harmanpreet Kaur Net Worth: கோடிகளை குவித்த ஹர்மன்ப்ரீத் கவுர்! மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?