டி20 உலக கோப்பை: சூர்யகுமார் யாதவ், ராகுல் அதிரடி அரைசதம்.. ஜிம்பாப்வேவுக்கு கடின இலக்கை நிர்ணயித்த இந்தியா

By karthikeyan V  |  First Published Nov 6, 2022, 3:28 PM IST

டி20 உலக கோப்பையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 186 ரன்களை குவித்து, 187 ரன்கள் என்ற கடின இலக்கை ஜிம்பாப்வேவுக்கு நிர்ணயித்துள்ளது.
 


டி20 உலக கோப்பையில் க்ரூப் 1லிருந்து நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளும், க்ரூப் 2லிருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், இன்று மெல்பர்னில் நடந்துவரும் கடைசி சூப்பர் 12 சுற்று போட்டியில் இந்திய அணி ஜிம்பாப்வேவை எதிர்கொண்டு ஆடிவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

Tap to resize

Latest Videos

undefined

PAK vs BAN: ஷகிப் அல் ஹசனுக்கு தவறாக அவுட் கொடுத்தாரா தேர்டு அம்பயர்..? சர்ச்சை எல்பிடபிள்யூ.. வைரல் வீடியோ

இந்திய அணியில் ஒரு அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்திய முன்னாள் வீரர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டு முன்னாள் ஜாம்பவான்களும் வலியுறுத்தியபடி, நிறைய ரசிகர்கள் எதிர்பார்த்தபடி, ரிஷப் பண்ட் ஆடும் லெவனில் எடுக்கப்பட்டார். தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு ரிஷப் பண்ட் அணியில் எடுக்கப்பட்டார்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.

ஜிம்பாப்வே அணி:

வெஸ்லி மாதவெர், கிரைக் எர்வின் (கேப்டன்), ரெஜிஸ் சகப்வா (விக்கெட் கீப்பர்), சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, டோனி முன்யோங்கா, ரியான் பர்ல், டெண்டாய் சத்தாரா, ரிச்சர்ட் நகர்வா, வெலிங்டன் மசகட்ஸா, ப்ளெஸ்ஸிங் முசாரபாணி.

டி20 உலக கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி 4வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான்

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 15 ரன்னிலும், விராட் கோலி 26 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக ஆடிய கேஎல் ராகுல் அரைசதம் அடித்தார். 35 பந்தில் 51 ரன்கள் அடித்தார் ராகுல். ரிஷப் பண்ட் 3 ரன்னில் ஆட்டமிழக்க, ஹர்திக் பாண்டியா 18 பந்தில் 18 ரன்கள் மட்டுமே அடித்தார். ஆனால் சூர்யகுமார் யாதவ் வழக்கம்போலவே தனது அதிரடியான பேட்டிங்கை ஆடி, ஜிம்பாப்வே பவுலிங்கை வெளுத்து கட்டினார். அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி அரைசதம் அடித்த சூர்யகுமார் 25 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 61 ரன்களை குவிக்க, 20 ஓவரில் 186 ரன்களை குவித்த இந்திய அணி, 187 ரன்கள் என்ற கடின இலக்கை ஜிம்பாப்வேவுக்கு நிர்ணயித்துள்ளது.
 

click me!