டி20 உலக கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி 4வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான்

By karthikeyan V  |  First Published Nov 6, 2022, 1:35 PM IST

டி20 உலக கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
 


டி20 உலக கோப்பையில் முக்கியமான சூப்பர் 12 சுற்று போட்டியில் பாகிஸ்தான் - வங்கதேச அணிகள் மோதின. க்ரூப் 2லிருந்து ஏற்கனவே இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், இந்த க்ரூப்பிலிருந்து அரையிறுதிக்கு முன்னேறும் 2வது அணியை தீர்மானிக்கும் முக்கியமான போட்டி. இந்த போட்டியில் ஜெயிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறலாம் என்பதால் இரு அணிகளும் வெற்றி முனைப்பில் களம் கண்டன.

அடிலெய்டில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

Tap to resize

Latest Videos

undefined

ஐபிஎல் 2023: சிஎஸ்கே அணி கழட்டிவிடும் 2 வீரர்கள் இவர்கள் தான்..!

வங்கதேச அணி:

நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ, சௌமியா சர்க்கார், லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), அஃபிஃப் ஹுசைன், நூருல் ஹசன் (விக்கெட் கீப்பர்), மொசாடெக் ஹுசைன், டஸ்கின் அகமது, நசும் அகமது, எபாடட் ஹுசைன், முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.

பாகிஸ்தான் அணி:

முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), பாபர் அசாம் (கேப்டன்), முகமது ஹாரிஸ், ஷான் மசூத், இஃப்டிகார் அகமது, முகமது நவாஸ், ஷதாப் கான், முகமது வாசிம், நசீம் ஷா, ஹாரிச் ராஃப், ஷாஹீன் அஃப்ரிடி.

முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணியில் தொடக்க வீரர் ஷாண்டோ மட்டுமே சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். 48 பந்தில் ஷாண்டோ 54 ரன்கள் அடித்தார். லிட்டன் தாஸ்(10), சௌமியா சர்க்கார்(20), ஷகிப் அல் ஹசன் (0), அஃபிஃப் ஹுசைன் (24), மொசாடெக் ஹுசைன் (5), நூருல் ஹசன் (0) என மற்ற அனைவருமே சொதப்ப வங்கதேச அணி 20 ஓவரில் வெறும் 127 ரன்கள் மட்டுமே அடித்தது.

128 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் பாபர் அசாம் 25 ரன்களும், முகமது ரிஸ்வான் 32 ரன்களும் அடித்தனர். முகமது நவாஸ் 4 ரன் மட்டுமே அடித்தார். பாகிஸ்தான் அணியின் ரன் வேகம் ஸ்லோவாக இருந்த நிலையில், வங்கதேசம் ஒரு நம்பிக்கையை பெற்றது. அந்த சமயத்தில் அதிரடியாக ஆடிய முகமது ஹாரிஸ் 18 பந்தில் 31 ரன்களையும், ஷான் மசூத் 14 பந்தில் 24 ரன்களையும் அடிக்க, 17வது ஓவரிலேயே இலக்கை அடித்து பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

ஃபைனலில் ஹிமாச்சல் பிரதேசத்தை வீழ்த்தி முதல் முறையாக சையத் முஷ்டாக் அலி டிராபியை வென்றது மும்பை அணி

இந்த வெற்றியின் மூலம் 6 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான் அணி. க்ரூப் 1லிருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், க்ரூப் 2லிருந்து ஏற்கனவே இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், கடைசி அணியாக பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
 

click me!