டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் - வங்கதேசம் இடையேயான போட்டியில் ஷகிப் அல் ஹசனுக்கு தேர்டு அம்பயர் எல்பிடபிள்யூ அவுட் கொடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ செம வைரலாகிவருகிறது.
டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் - வங்கதேசம் ஆகிய 2 அணிகளில் எந்த அணி கடைசி அணியாக அரையிறுதிக்கு முன்னேறும் என்பதை தீர்மானிக்கும் போட்டி அடிலெய்டில் நடந்தது. இந்த முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி 20 ஓவரில் 127 ரன்கள் மட்டுமே அடித்தது. வங்கதேச அணியில் தொடக்க வீரர் ஷாண்டோ மட்டுமே சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். 48 பந்தில் ஷாண்டோ 54 ரன்கள் அடித்தார். லிட்டன் தாஸ்(10), சௌமியா சர்க்கார்(20), ஷகிப் அல் ஹசன் (0), அஃபிஃப் ஹுசைன் (24), மொசாடெக் ஹுசைன் (5), நூருல் ஹசன் (0) என மற்ற அனைவருமே சொதப்ப வங்கதேச அணி 20 ஓவரில் வெறும் 127 ரன்கள் மட்டுமே அடித்தது.
undefined
டி20 உலக கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி 4வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான்
128 ரன்கள் என்ற இலக்கை 17வது ஓவரிலேயே அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்த போட்டியில் வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் விக்கெட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 11வது ஓவரை வீசிய ஷதாப் கான், அந்த ஓவரின் 4வது பந்தில் சௌமியா சர்க்காரை வீழ்த்தினார். அடுத்த பந்திலேயே ஷகிப் அல் ஹசன் அவுட்டானார். ஷகிப் அல் ஹசனுக்கு ஷதாப் கான் எல்பிடபிள்யூ அப்பீல் செய்ய, அம்பயரும் அவுட் கொடுத்தார். உடனடியாக ரிவியூ செய்தார் ஷகிப் அல் ஹசன். ரீப்ளேவில் பந்து பேட்டை கடக்கும்போது அல்ட்ரா எட்ஜில் தெளிவான ஸ்பைக் தெரிந்தது. பேட்டுக்கும் தரைக்கும் இடையே இடைவெளி இருந்தது. ஆனாலும் பந்து பேட்டை கடக்கும்போது ஸ்பைக் தெரிந்தது. அப்படியென்றால் பந்து பேட்டில் பட்டதாகத்தான் அர்த்தம். ஆனாலும் தேர்டு அம்பயர் அவுட் கொடுத்தார்.
ஐபிஎல் 2023: சிஎஸ்கே அணி கழட்டிவிடும் 2 வீரர்கள் இவர்கள் தான்..!
இந்த முடிவால் அதிருப்தியடைந்த ஷகிப் அல் ஹசன் அம்பயர்களிடம் வாதம் செய்தார். ஆனாலும் பிரயோஜனமில்லை. அவுட் கொடுக்கப்பட்டதால் ஷகிப் அல் ஹசன் வெளியேற நேரிட்டது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.