ஐபிஎல்லில் ரோஹித், கோலி, தோனிலாம் செய்யாத சம்பவத்தை செய்த ரெய்னா..! சின்ன தலயின் பிரத்யேக ரெக்கார்டு

By karthikeyan VFirst Published Jul 5, 2020, 5:26 PM IST
Highlights

ஐபிஎல்லில் ரெய்னாவுக்கே மட்டுமே சொந்தமான ஒரு ரெக்கார்டை பார்ப்போம்.
 

ஐபிஎல்லில் ரெய்னாவுக்கே மட்டுமே சொந்தமான ஒரு ரெக்கார்டை பார்ப்போம்.

ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியான சிஎஸ்கே-வின் செல்லப்பிள்ளை சுரேஷ் ரெய்னா. 2008ல் ஐபிஎல் தொடங்கியதிலிருந்து சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணியில் ஆடிவருகிறார். 2016-2017 சீசன்களில் சூதாட்டப்புகாரால் சிஎஸ்கே அணி ஐபிஎல்லில் ஆடாத இரண்டு சீசன்கள் மட்டும் குஜராத் லயன்ஸ் அணிக்காக ஆடினார். 

அதைத்தவிர மற்ற 10 சீசன்களும் சிஎஸ்கே அணிக்காக ஆடியவர் ரெய்னா. அதனால் ரெய்னாவுக்கு தமிழ் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் சிஎஸ்கே அணியுடனான ரெய்னாவின் உறவு வலுவானது. சிஎஸ்கே கேப்டன் தோனியை தல என பாசமாக அழைக்கும் ரசிகர்கள், ரெய்னாவை சின்ன தல என அழைக்கின்றனர். அந்தளவிற்கு ரெய்னாவுக்கும் சிஎஸ்கேவிற்கும் இடையேயான உறவு சிறப்பு வாய்ந்தது. 

ஐபிஎல்லின் வெற்றிகரமான வீரர்களில் ரெய்னாவும் ஒருவர். ஐபிஎல்லில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கோலிக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார் ரெய்னா. கோலி ஐபிஎல்லில் 5412 ரன்கள் அடித்து முதலிடத்தில் இருக்கிறார். கோலியை விட வெறும் 44 ரன்கள் மட்டுமே பின் தங்கியிருக்கும் ரெய்னா, இரண்டாவது இடத்தில் இருக்கிறார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல சிறப்பான இன்னிங்ஸ்களை ஆடி வெற்றிகளை குவித்து கொடுத்தவர் ரெய்னா. சிஎஸ்கே அணி ஐபிஎல் டைட்டிலை வென்ற 3 சீசன்களிலும் மிகப்பெரிய பங்காற்றியவர் ரெய்னா. 

ஐபிஎல்லின் வெற்றிகரமாக வீரராக திகழும் ரெய்னா, ஐபிஎல்லில் பிரத்யேகமான ஒரு ரெக்கார்டுக்கு சொந்தக்காரராக திகழ்கிறார். கேகேஆர், மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 3 அணிகளுக்கு எதிராகவும் 800 ரன்களுக்கு மேல் குவித்திருக்கிறார் ரெய்னா. கேகேஆர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு எதிராக தலா 818 ரன்களும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக 814 ரன்களும் குவித்துள்ளார். இதன்மூலம் ஐபிஎல்லில் மூன்று வெவ்வேறு அணிகளுக்கு எதிராக 800 ரன்களுக்கு மேல் குவித்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக ரெய்னா திகழ்கிறார். இதுவரை வேறு யாருமே ஐபிஎல்லில் 3 வெவ்வேறு அணிகளுக்கு எதிராக 800 ரன்களுக்கு மேல் குவித்ததில்லை. 
 

click me!