2003 உலக கோப்பைக்கான என்னோட அணியில் இவங்க 3 பேரையும் எடுத்திருப்பேன்..! தாதா ஓபன் டாக்

By karthikeyan VFirst Published Jul 5, 2020, 2:56 PM IST
Highlights

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான கங்குலி, சுவாரஸ்யமான ஒரு கேள்விக்கு பதிலளித்துள்ளார். 
 

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான கங்குலி, சுவாரஸ்யமான ஒரு கேள்விக்கு பதிலளித்துள்ளார். 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தான், இந்திய அணியை மறுகட்டமைப்பு செய்து, இளம் வீரர்களை அடையாளம் கண்டு, துடிப்பான அணியை உருவாக்கி, இந்திய அணியை சர்வதேச கிரிக்கெட் அரங்கில் வெற்றி நடை போடவைத்தவர். 

தலைமை பண்பும், நிர்வாகத்திறனும் மிக்க கங்குலி, சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், தோனி வரை பல சிறந்த வீரர்களுக்கு அவர்களின் ஆரம்பக்கட்டத்தில் ஆதரவாக இருந்து அவர்களை வளர்த்துவிட்டவர். 

அவரது தலைமையில் 2003 உலக கோப்பையின் இறுதி போட்டி வரை சென்றது இந்திய அணி. கங்குலி தலைமையில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சேவாக், யுவராஜ் சிங், அனில் கும்ப்ளே, ஸ்ரீநாத், ஜாகீர் கான், ஹர்பஜன் சிங் என மிகச்சிறந்த அணி காம்பினேஷனை உருவாக்கியிருந்தார் கங்குலி. ஆனாலும் 2003 உலக கோப்பையின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது இந்தியா. 2011 உலக கோப்பையை வென்ற இந்திய அணி, பெயரளவில் தோனி தலைமையிலான அணி என்றாலும், அந்த அணியின் பெரும்பாலான வீரர்கள் கங்குலி உருவாக்கிய, அவரது தலைமையில் 2003 உலக கோப்பையில் ஆடிய வீரர்கள். 

2019 உலக கோப்பையில், கோலி தலைமையிலான இந்திய அணி மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. லீக் சுற்றில் சிறப்பாக ஆடிய இந்திய அணி, அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியது. 

இந்நிலையில், 2019 உலக கோப்பைக்கான இந்திய அணியிலிருந்து 3 வீரர்களை உங்களது 2003 உலக கோப்பை அணிக்கு தேர்வு செய்யவில்லையென்றால், எந்த 3 வீரர்களை தேர்வு செய்வீர்கள் என்பதை காரணத்துடன் சொல்லுங்கள் என்ற ரசிகரின் கேள்விக்கு கங்குலி பதிலளித்துள்ளார். 

தாதா ஓபன்ஸ் வித் மயன்க் என்ற நிகழ்ச்சியில் மயன்க் அகர்வாலுடன் கங்குலி உரையாடினார். அப்போது, ரசிகரின் அந்த கேள்வியை மயன்க் அகர்வால் கங்குலியிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த கங்குலி, விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா ஆகிய மூவரையும் தேர்வு செய்வேன். 

காரணம் என்னவென்றால், பும்ரா தரமான ஃபாஸ்ட் பவுலர். 2003 உலக கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடந்தது. அங்கு நமது அணி நன்றாகத்தான் பந்துவீசியது. ரோஹித் சர்மா ஓபனிங் இறங்குவார். நான் மூன்றாம் வரிசையில் இறங்குவேன். சேவாக் இதை பார்ப்பார் என நினைக்கிறேன். நாளை எனக்கு சேவாக் கால் பண்ணாலும் பண்ணுவார். ஆனாலும் இந்த மூன்று பேரையும் எனது அணியில் எடுப்பேன் என்று கங்குலி தெரிவித்துள்ளார். 

ரோஹித் சர்மா 2019 உலக கோப்பையில் 5 சதங்களை விளாசினார். அதன்மூலம் ஒரு உலக கோப்பை தொடரில் அதிகபட்ச சதமடித்த வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்தார். 
 

click me!