
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் சிஎஸ்கே மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
இந்த 2 அணிகளுக்குமே இந்த சீசன் சரியான தொடக்கமாக அமையவில்லை. சன்ரைசர்ஸ் அணி ஆடிய 2 போட்டிகளிலும், சிஎஸ்கே அணி ஆடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்தன. இரு அணிகளுமே இதுவரை ஆடிய அனைத்து போட்டிகளிலுமே தோல்வியடைந்ததால் இரு அணிகளுமே முதல் வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கியிருப்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.
மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முதல் 2 போட்டிகளிலும் பேட்டிங்கில் சொதப்பிய அப்துல் சமாத் நீக்கப்பட்டுள்ளார். ஏலத்திற்கு முன்பாகவே தக்கவைக்கப்பட்ட வீரராக இருந்தாலும் கூட, அப்துல் சமாத் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ஷுஷாங்க் சிங் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் வெளிநாட்டு வீரர் ரொமாரியோ ஷெர்ஃபேனுக்கு பதிலாக மார்கோ யான்சென் சேர்க்கப்பட்டுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:
அபிஷேக் ஷர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம், நிகோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், மார்கோ யான்சென், உம்ரான் மாலிக், டி.நடராஜன்.
சிஎஸ்கே அணியில் ப்ரிட்டோரியஸுக்கு பதிலாக இலங்கை ஸ்பின்னர் மஹீஷ் தீக்ஷனா சேர்க்கப்பட்டுள்ளார்.
சிஎஸ்கே அணி:
ராபின் உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி, அம்பாதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), ஷிவம் துபே, தோனி (விக்கெட் கீப்பர்), ட்வைன் பிராவோ, கிறிஸ் ஜோர்டான், மஹீஷ் தீக்ஷனா, முகேஷ் சௌத்ரி.