RCB vs MI:ஆர்சிபி அணியில் மேக்ஸ்வெல் கம்பேக்! மும்பை அணியில் 2 அதிரடி மாற்றங்கள்! இரு அணிகளின் உத்தேச ஆடும் 11

Published : Apr 09, 2022, 02:51 PM IST
RCB vs MI:ஆர்சிபி அணியில் மேக்ஸ்வெல் கம்பேக்! மும்பை அணியில் 2 அதிரடி மாற்றங்கள்! இரு அணிகளின் உத்தேச ஆடும் 11

சுருக்கம்

ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான  இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி புனேவில் நடக்கிறது.

இந்த சீசனில் இதுவரை ஆடிய 3 போட்டிகளில் ஆர்சிபி அணி 2 வெற்றிகளை பெற்றுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி ஆடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் பின் தங்கியுள்ளது. எனவே இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றியை பெறும் முனைப்பில் களமிறங்குகிறது.

இந்த போட்டிக்கான ஆர்சிபி அணியில் ஒரு மாற்றம் செய்யப்படும். முதல் 3 போட்டிகளில் ஆடாத க்ளென் மேக்ஸ்வெல் இந்த போட்டியில் ஆடுவதால், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு நீக்கப்படுவார்.

உத்தேச ஆர்சிபி அணி:

ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, க்ளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), டேவிட் வில்லி, ஷபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், முகமது சிராஜ். 

மும்பை இந்தியன்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்படும். கேகேஆருக்கு எதிரான கடந்த போட்டியில் ஒரே ஓவரில் 35 ரன்களை வாரி வழங்கிய டேனியல் சாம்ஸுக்கு பதிலாக ஃபேபியன் ஆலனும், பாசில் தம்பிக்கு பதிலாக ஜெய்தேவ் உனாத்கத்தும் ஆடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), டிவால்ட் பிரெவிஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கைரன் பொல்லார்டு, ஃபேபியன் ஆலன், முருகன் அஷ்வின், ஜெய்தேவ் உனாத்கத், ஜஸ்ப்ரித் பும்ரா, டைமல் மில்ஸ்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: அபிஷேக் சர்மா அதிரடியால் ஈசியாக சேஸ் செய்த இந்திய அணி! தொடரில் 2-1 என முன்னிலை!
Tilak Varma: சேஸிங்கில் 'கிங்' கோலிக்கே சவால் விடும் திலக் வர்மா..! மெகா ரிக்கார்ட்..!