#IPL2021 தொடர் தோல்விகள் எதிரொலி.. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் அதிரடி மாற்றம்

By karthikeyan VFirst Published May 1, 2021, 4:09 PM IST
Highlights

ஐபிஎல் 14வது சீசனில் தொடர் தோல்விகளின் விளைவாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் கேப்டனை அதிரடியாக மாற்றியுள்ளது.
 

ஐபிஎல் 14வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் இதுவரை சன்ரைசர்ஸ் அணி ஆடிய 6 போட்டிகளில் வெறும் ஒரேயொரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

சன்ரைசர்ஸ் அணி பேட்டிங்கில் பெரும்பாலும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களையே அதிகமாக சார்ந்திருக்கிறது. மிடில் ஆர்டர் பலவீனமாக இருக்கிறது. புவனேஷ்வர் குமார், நடராஜன் இல்லாமல் பவுலிங்கிலும் திணறுகிறது.

இந்த சீசனில் தொடர் தோல்விகளால் துவண்டுபோயுள்ளது சன்ரைசர்ஸ் அணி. கேப்டன் வார்னரும் பேட்டிங்கில் ஃபார்மில் இல்லை. அவர் கேப்டன் என்பதால் அவரை அணியிலிருந்து நீக்கமுடியாத நிலை உள்ளது. எனவே ஆடும் லெவனில் வெளிநாட்டு வீரர்கள் காம்பினேஷனை மாற்றும் முனைப்பில் உள்ள சன்ரைசர்ஸ் அணி, இந்த சீசனின் இரண்டாம் பாதியில் வெகுண்டெழும் முனைப்பில் கேப்டனை மாற்றியுள்ளது.

சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த டேவிட் வார்னர் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டு, கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த சீசனின் எஞ்சிய போட்டிகளில் வில்லியம்சன் தான் கேப்டன்சி செய்யவுள்ளார்.

வார்னருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைப்பதே சந்தேகமாகியுள்ளது.  2016 ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணிக்கு டேவிட் வார்னர் கோப்பையை வென்று கொடுத்தது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில் வில்லியம்சன் கேப்டன்சியிலும் சன்ரைசர்ஸ் அணி சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. 2018 ஐபிஎல் சீசனில் வில்லியம்சன் தலைமையில் சன்ரைசர்ஸ் அணி ஃபைனலுக்கு முன்னேறியது. ஃபைனலில் சிஎஸ்கேவிடம் தோற்று கோப்பையை இழந்தது.

சன்ரைசர்ஸ் அணியின் இந்த நகர்வு, சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு.
 

click me!