#MIvsCSK சிஎஸ்கே அணியில் ஒரு மாற்றம்..? மும்பை இந்தியன்ஸில் இந்த மேட்ச்சிலும் அவரு ஆடல

By karthikeyan VFirst Published May 1, 2021, 2:47 PM IST
Highlights

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் பரம எதிரி அணிகள். ரோஹித் சர்மா மற்றும் தோனி ஆகிய இருவருமே சிறந்த கேப்டன்கள். எனவே 2 சிறந்த கேப்டன்கள் வழிநடத்தும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான போட்டி என்றாலே அனல் பறக்கும்; ரசிகர்களின் எதிர்பார்ப்பும் உச்சத்தில் இருக்கும்.

அந்தவகையில் இந்த சீசனில் மும்பையும் சென்னையும் இன்று மோதுகின்றன. இந்த போட்டியில் களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. கடந்த போட்டியில் களமிறங்கிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும். கடந்த இஷான் கிஷனை நீக்கிவிட்டு குல்ட்டர்நைல் சேர்க்கப்பட்ட நிலையில், இன்றைய போட்டியிலும் அவரே ஆடுவார். இஷான் கிஷன் ஆடமாட்டார்.

உத்தேச மும்பை இந்தியன்ஸ் அணி:

குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா(கேப்டன்), சூர்யகுமார் யாதவ், க்ருணல் பாண்டியா, பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா, குல்ட்டர்நைல், ஜெயந்த் யாதவ், ராகுல் சாஹர், பும்ரா, போல்ட்.

சிஎஸ்கே அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது. ஃபாஸ்ட் பவுலர் லுங்கி இங்கிடிக்கு பதிலாக ரிஸ்ட் ஸ்பின்னர் இம்ரான் தாஹிர் சேர்க்கப்படலாம்.

உத்தேச சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டுப்ளெசிஸ், மொயின் அலி, ரெய்னா, ராயுடு, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஜடேஜா, சாம் கரன், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர்.
 

click me!