ரவிச்சந்திரன் அஷ்வின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா..!

By karthikeyan VFirst Published May 1, 2021, 12:25 PM IST
Highlights

இந்திய அணியின் சீனியர் ஸ்பின்னரும் டெல்லி கேபிடள்ஸ் வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் குடும்பத்தில் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவருகிறது. தினமும் சுமார் 4 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் ஐபிஎல் 14வது சீசன் இந்தியாவில் நடந்துவருகிறது.

இந்நிலையில், ஐபிஎல் டெல்லி கேபிடள்ஸ் அணிக்காக முதல் சில போட்டிகளில் ஆடிய ரவிச்சந்திரன் அஷ்வின், கடந்த வாரம் அந்த அணி சென்னையில் ஆடிய ஒரு போட்டியுடன், இந்த சீசனிலிருந்து விலகுவதாக அறிவித்தார் அஷ்வின்.

கொரோனா பெருந்தொற்று நேரத்தில் தன் குடும்பத்தினருடன் இருக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், ஐபிஎல்லில் இருந்து விலகுவதாக தெரிவித்து விலகினார் அஷ்வின்.

இந்நிலையில், அஷ்வினின் மனைவி ப்ரீத்தி பதிவிட்டுள்ள டுவீட்டில், குடும்பத்தில் 6 பெரியவர்கள், 4 குழந்தைகள் என மொத்தம் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருதையும் உறுதி செய்த ப்ரீத்தி, அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
 

Feeling ok enough to croak a tiny hi to all of you.6 adults and 4 children ended up testing+ the same week,with our kids being the vehicles of transmission - the core of my family,all down with the virus in different homes/hospitals..Nightmare of a week.1 of 3 parents back home.

— Wear a mask. Take your vaccine. (@prithinarayanan)

Take the vaccine. Give yourselves and your family the best chance to fight this.

— Wear a mask. Take your vaccine. (@prithinarayanan)
click me!