GT vs SRH: அபிஷேக் ஷர்மா, மார்க்ரம் அதிரடி அரைசதம்.. ஷஷான்க் சிங் காட்டடி ஃபினிஷிங்! GT-க்கு கடின இலக்கு

By karthikeyan VFirst Published Apr 27, 2022, 9:38 PM IST
Highlights

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் 20 ஓவரில் 195 ரன்களை குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 196 ரன்கள் என்ற கடின இலக்கை குஜராத் டைட்டன்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
 

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் ஆடிவருகின்றன. மும்பை வான்கடேவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

குஜராத் டைட்டன்ஸ் அணி:

ஷுப்மன் கில், ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (கேப்டன்), அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், அல்ஸாரி ஜோசஃப், லாக்கி ஃபெர்குசன், யஷ் தயால், முகமது ஷமி.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

அபிஷேக் ஷர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம், நிகோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஷஷான்க் சிங், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், மார்கோ யான்சென், உம்ரான் மாலிக், டி.நடராஜன்.

முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான கேன் வில்லியம்சன் 5 ரன்னிலும், 3ம் வரிசையில் இறங்கிய ராகுல் திரிபாதி 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அபிஷேக் ஷர்மாவும் மார்க்ரமும் இணைந்து 96 ரன்களை குவித்தனர். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த அபிஷேக் ஷர்மா, 42 பந்தில் 65 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். சுழல் ஜாம்பவான் ரஷீத் கான் பவுலிங்கை சிக்ஸர்களாக விளாசினார் அபிஷேக்.

அபிஷேக்கை தொடர்ந்து மார்க்ரமும் அரைசதம் அடித்தார். மார்க்ரம் 56 ரன்கள் அடித்தார். பின்வரிசையில் ஷஷான்க் சிங் அதிரடியாக ஆடினார். ஃபெர்குசன் வீசிய கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசினார்.வெறும்  6 பந்தில் 25 ரன்களை விளாசினார் ஷஷான்க் சிங். 20 ஓவரில் 195 ரன்களை குவித்த சன்ரைசர்ஸ் அணி, 196 ரன்கள் என்ற கடின இலக்கை குஜராத் டைட்டன்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
 

click me!