
ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்த 2 அணிகளுமே பவுலிங்கில் பலம் வாய்ந்த அணிகள் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.
மும்பை வான்கடேவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். அனைத்து அணிகளும் டாஸ் ஜெயித்து ஃபீல்டிங்கை தேர்வு செய்துகொண்டிருந்த நிலையில், குஜராத் அணி ஆடிய கடைசி போட்டியில், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார் ஹர்திக் பாண்டியா. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன் இந்த போட்டியில் தான் முதல் முறையாக டாஸ் தோற்கிறார். இதற்கு முன் சன்ரைசர்ஸ் அணி ஆடிய 7 போட்டிகளிலும் கேன் வில்லியம்சன் தான் டாஸ் வென்றார்.
குஜராத் டைட்டன்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் குஜராத் டைட்டன்ஸ் களமிறங்கியுள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணி:
ஷுப்மன் கில், ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (கேப்டன்), அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், அல்ஸாரி ஜோசஃப், லாக்கி ஃபெர்குசன், யஷ் தயால், முகமது ஷமி.
சன்ரைசர்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாஷிங்டன் சுந்தர் காயத்திலிருந்து மீண்டு முழு ஃபிட்னெஸுடன் மீண்டும் களமிறங்குவதால் ஜெகதீஷா சுஜித் நீக்கப்பட்டுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:
அபிஷேக் ஷர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம், நிகோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஷஷான்க் சிங், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், மார்கோ யான்சென், உம்ரான் மாலிக், டி.நடராஜன்.