இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் இவர்தான்.! பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் நியமனம்

Published : Apr 27, 2022, 06:04 PM IST
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் இவர்தான்.! பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் நியமனம்

சுருக்கம்

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்படவுள்ளார்.  

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக கடந்த 5 ஆண்டுகளாக இருந்துவந்த ஜோ ரூட்டின் கேப்டன்சியில் இங்கிலாந்து அணி 64 டெஸ்ட் போட்டிகளில் 27 வெற்றி மற்றும் 26 தோல்விகளை அடைந்தது.

ஜோ ரூட்டின் கேப்டன்சியில் சிறப்பாக செயல்பட்டுவந்த இங்கிலாந்து அணி, கடந்த 2 ஆண்டுகளாக படுமோசமாக சொதப்பிவருகிறது. சொந்த மண்ணில் இந்தியாவிடம் படுதோல்வி, ஆஷஸ் தொடரை 0-4 என ஆஸ்திரேலியாவிடம் இழந்தது என படுதோல்விகளை அடைந்துவந்தது.

ஜோ ரூட்டின் கேப்டன்சியில் இங்கிலாந்து அணி கடைசியாக ஆடிய 17 டெஸ்ட் போட்டிகளில் ஒரேயொரு வெற்றி  மட்டுமே பெற்றது. தொடர்ச்சியாக இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் படுதோல்வி அடைந்துவந்த நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து ஜோ ரூட் அண்மையில் விலகினார்.

இந்நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ஆல்ரவுண்டரும் மேட்ச் வின்னருமான பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்படவுள்ளார்.  இதுதொடர்பாக அவரிடம் கேட்டதற்கு, அவர் கேப்டன்சியை ஏற்க ஒப்புக்கொண்டு விட்டதாகவும், இன்னும் 2 நாட்களில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணிக்காக 79 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 5061 ரன்கள் அடித்துள்ளார்; 174 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 

இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளரும் விலகிய நிலையில், புதிய தலைமை பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க முன்னாள் ஜாம்பவான் கேரி கிறிஸ்டன் நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. 2011ல் இந்திய அணி உலக கோப்பையை வென்றபோது கேரி கிறிஸ்டன் தான் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கேரி கிறிஸ்டன் பயிற்சியாளர் பதவியில் நல்ல அனுபவம் வாய்ந்தவர். அவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டால், கண்டிப்பாக இங்கிலாந்து அணி அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் என்பதில் சந்தேகமில்லை.
 

PREV
click me!

Recommended Stories

IPL Auction 2026: சிஎஸ்கே வாங்கிய வீரர்கள் யார்? யார்? CSK அணி வீரர்கள் முழு பட்டியல் இதோ!
IPL Auction 2026: விலை போன வீரர்கள் யார்? யார்? விலை போகாத வீரர்கள் யார்? யார்? முழு லிஸ்ட் இதோ!