IPL 2021 படுமட்டமா பேட்டிங் ஆடி மொக்கையான ஸ்கோர் அடித்த சன்ரைசர்ஸ்..! கேகேஆர் ஈசியா ஜெயிச்சுடும்

Published : Oct 03, 2021, 09:15 PM IST
IPL 2021 படுமட்டமா பேட்டிங் ஆடி மொக்கையான ஸ்கோர் அடித்த சன்ரைசர்ஸ்..! கேகேஆர் ஈசியா ஜெயிச்சுடும்

சுருக்கம்

கேகேஆருக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 20 ஓவரில் வெறும் 115 ரன்கள் மட்டுமே அடித்து, 116 ரன்கள் என்ற எளிய இலக்கை கேகேஆருக்கு நிர்ணயித்துள்ளது.  

ஐபிஎல் 14வது சீசனில் பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் சன்ரைசர்ஸை எதிர்கொண்டு ஆடிவருகிறது கேகேஆர் அணி. சன்ரைசர்ஸ் அணி ஏற்கனவே லீக் சுற்றுடன் வெளியேறுவது உறுதியாகிவிட்டதால், அந்த அணிக்கு இழப்பதற்கு எதுவுமில்லை.

துபாயில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, படுமோசமாக பேட்டிங் ஆடியது. சன்ரைசர்ஸ் அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் அப்துல் சமாத் ஆகிய இருவரைத்தவிர வேறு யாருமே ஓரளவிற்குக்கூட ஆடவில்லை.

நன்றாக ஆடிய வில்லியம்சன் 26 ரன்னில் ரன் அவுட்டாகி வெளியேறினார். அப்துல் சமாத் 18 பந்தில் 3 சிக்ஸர்களுடன் 25 ரன்கள் அடித்தார். பிரியம் கர்க் 31 பந்தில் 21 ரன்கள் அடித்தார். ஜேசன் ராய்(10), ரிதிமான் சஹா(0), அபிஷேக் ஷர்மா(6), ஜேசன் ஹோல்டர்(2) ஆகியோர் படுமோசமாக சொதப்பியதால், 20 ஓவரில் 115 ரன்கள் மட்டுமே அடித்தது சன்ரைசர்ஸ் அணி.

116 ரன்கள் என்பது கேகேஆர் அணிக்கு மிக மிக எளிய இலக்கு. அதை எளிதாக அடித்து கேகேஆர் அணி வெற்றி பெற்றுவிடும்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs NZ T20: இதுக்கு மேல சான்ஸ் இல்ல‌.. சஞ்சு சாம்சன் அதிரடி நீக்கம்?.. இளம் வீரருக்கு நிரந்தர இடம்!
மின்னல் வேக அரை சதம்.. SKY சாதனையை முறியடித்து அபிஷேக் சர்மா 'மெகா' சாதனை!