SA20:ஃபைனலில் பிரிட்டோரியா கேபிடள்ஸை வீழ்த்தி முதல் சீசனில் டைட்டில் வென்று சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி சாதனை

By karthikeyan VFirst Published Feb 12, 2023, 8:16 PM IST
Highlights

தென்னாப்பிரிக்கா டி20 லீக் ஃபைனலில் பிரிட்டோரியா கேபிடள்ஸை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் சீசனில் டைட்டிலை வென்றது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி. 
 

தென்னாப்பிரிக்கா டி20 லீக் தொடரின் ஃபைனல் இன்று நடந்தது. ஃபைனலில் பிரிட்டோரியா கேபிடள்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி:

ஆடம் ரோஸிங்டன் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா, ஜோர்டான் ஹெர்மான், எய்டன் மார்க்ரம் (கேப்டன்), டிரிஸ்டான் ஸ்டப்ஸ், ஜோர்டான் காக்ஸ், மார்கோ யான்சென், பிரைடான் கார்ஸ், ஆட்னியல் பார்ட்மேன், வாண்டர் மெர்வி, சிசாண்டா மகளா.

IND vs AUS: அவருக்கு கடைசியா ஒரு சான்ஸ் கொடுங்க.. சரியா வரலைனா தூக்கிருங்க..! கவாஸ்கர் கருத்து

பிரிட்டோரியா கேபிடள்ஸ் அணி:

ஃபிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), குசால் மெண்டிஸ், தியுனிஸ் டி பிருய்ன், ரைலீ ரூசோ, காலின் இங்ராம், ஜேம்ஸ் நீஷம்ம், வைன் பார்னெல் (கேப்டன்), ஈதன் பாஷ், மைகேல் பிரிட்டோரியஸ், அடில் ரஷீத், அன்ரிக் நோர்க்யா.

இந்த சீசன் முழுக்க அபாரமாக விளையாடி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறி, அரையிறுதியிலும் அபார வெற்றி பெற்று ஃபைனலுக்கு வந்த பிரிட்டோரியா கேபிடள்ஸ் அணி ஃபைனலில் பேட்டிங்கில் சொதப்பியது.

பிரிட்டோரியா கேபிடள்ஸ் அணியின் தொடக்க வீரர் ஃபிலிப் சால்ட் 8 ரன்னுக்கு ஆட்டமிழக்க, மற்றொரு அதிரடி தொடக்க வீரரான குசால் மெண்டிஸும் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின்னர் டி பிருய்ன்(11), ரைலீ ரூசோ(19), காலின் இங்ராம்(17), ஜிம்மி நீஷம் (19) என அனைத்து வீரர்களும் பதின் ரன்களில் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க, 19.3 ஓவரில் 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது பிரிட்டோரியா கேபிடள்ஸ் அணி. ஃபைனலில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் பவுலர்கள் அசத்தலாக பந்துவீசினர். வாண்டர் மெர்வி அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினார். 

ICC WTC புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் நங்கூரம் போட்ட இந்தியா..! ஆஸி.,க்கு சரிவு

136 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் தொடக்க வீரர் ரோஸிங்டன் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 30 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 57 ரன்கள் அடித்தார். ஹெர்மான் 22 ரன்களும், கேப்டன் மார்க்ரம் 19 பந்தில் 26 ரன்களும் அடித்தனர். டிரிஸ்டான் ஸ்டப்ஸ்(5), ஜோர்டான் காக்ஸ்(7) ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.

ஆனாலும் இலக்கு எளிதானது என்பதால் 17வது ஓவரில் இலக்கை அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி, தென்னாப்பிரிக்கா டி20லீக் முதல் சீசனில் டைட்டிலை வென்று சாதனை படைத்தது.

click me!