ஐபிஎல்லில் ஜாலியா ஆடிகிட்டு இருக்கும் ரோஹித், கோலியின் சர்வதேச கிரிக்கெட் கெரியருக்கு ஆப்பு..?

By karthikeyan V  |  First Published Apr 4, 2023, 4:44 PM IST

இந்தியாவில் இந்த ஆண்டு நடக்கும் ஒருநாள் உலக கோப்பையையும் இந்திய அணி வெல்லவில்லை என்றால் சில கிரிக்கெட் வீரர்களின் சர்வதேச கிரிக்கெட் கெரியர் முடிவுக்கு வந்துவிடும் என்று சுனில் கவாஸ்கர் எச்சரித்துள்ளார்.
 


இந்திய அணி 2013ம் ஆண்டுக்கு பிறகு 10 ஆண்டுகளாக எந்த ஐசிசி டிராபியையும் ஜெயிக்கவில்லை. தோனியின் கேப்டன்சியில் 2007ல் டி20 உலக கோப்பை, 2011ல் ஒருநாள் உலக கோப்பை மற்றும் 2013ல் சாம்பியன்ஸ் டிராபி என 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்றது இந்திய அணி.

அதன்பின்னர் இந்திய அணி ஒரு ஐசிசி கோப்பையை கூட ஜெயிக்கவில்லை. 2015, 2019 ஒருநாள் உலக கோப்பைகளில் அரையிறுதியுடன் வெளியேறியது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்திடம் தோற்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. 

Tap to resize

Latest Videos

விராட் கோலியின் கேப்டன்சியில் இந்திய அணியால் ஐசிசி கோப்பையை ஜெயிக்க முடியாத நிலையில், ரோஹித் சர்மாவின் கேப்டன்சியிலாவது ஜெயிக்கும் என்று எதிர்பார்த்தால், 2022 டி20 உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதியில் தோற்றது. ரோஹித் சர்மா சிறந்த கேப்டனாக அறியப்பட்டபோதிலும், அவரது கேப்டன்சியில் 2018ல் இந்திய அணி ஆசிய கோப்பையை வென்றிருந்தாலும், கடந்த ஆண்டு ஆசிய கோப்பையிலும் தோற்றது இந்திய அணி.

IPL 2023: சிஎஸ்கே கூட ஆடுறதும், ஆபத்துகிட்ட ஆதார் கேட்குறதும் ஒண்ணு.! செம பில்டப் கொடுத்த ஹர்பஜன் சிங்

இந்திய அணிக்கு ஒரு ஐசிசி டிராபி கண்டிப்பாக வேண்டும். அந்தவகையில், இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது. 2011ம் ஆண்டுக்கு பின் சொந்த மண்ணில் உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது இந்திய அணி.

இந்நிலையில், இந்த உலக கோப்பையையும் ஜெயிக்கவில்லை என்றால் சில வீரர்களின் சர்வதேச கிரிக்கெட் கெரியர் முடிவடைவதற்கு வாய்ப்புள்ளது என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ரோஹித், கோலி ஆகியோரைத்தான் கவாஸ்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரோஹித், கோலி மாதிரியான வீரர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை தவறவிடக்கூடாது என்பது அவரது கருத்து. குறிப்பாக முக்கியமான தொடர்கள் மற்றும் உலக கோப்பை ஆண்டில் நடக்கும் போட்டிகளை தவறவிடக்கூடாது என்பது கவாஸ்கரின் கருத்து. கவாஸ்கர் 2020-2021 ஆஸி., சுற்றுப்பயணத்திலிருந்து பாதியில் விலகியபோதே விமர்சித்திருந்தார். அதேபோல கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா, ஆஸி.,க்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆடாததை கடுமையாக விமர்சித்திருந்தார். 

இதுகுறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர், இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பையையும் ஜெயிக்கவில்லை என்றால் இந்திய அணியில் சில வீரர்களின் சர்வதேச கிரிக்கெட் கெரியர் முடிவிற்கு வந்துவிடும். எனவே உலக கோப்பைக்கு முந்தைய அனைத்து சர்வதேச போட்டிகளிலும், கோர் அணியில் உள்ள முக்கியமான வீரர்கள் ஆடியாக வேண்டும் என்றார்.

IPL 2023:பையன் செம டேலண்ட்; இந்த சீசனுக்கு பின் இந்திய அணியில் இடம் கிடைக்கும்! இளம் வீரருக்கு சேவாக் புகழாரம்

ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட இந்திய அணியின் சீனியர் வீரர்கள் ஐபிஎல்லில் ஜாலியாக ஆடிவரும் நிலையில், கவாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏனெனில் ஐபிஎல்லை எந்த வீரரும் புறக்கணிப்பதில்லை. 2 மாதம் முழு சீசனிலும் அனைத்து போட்டிகளிலும் ஆடிவிடுகிறார்கள். சர்வதேச போட்டியில் மட்டும் ஓய்வு வேண்டும் என்று எடுத்துக்கொள்கிறார்கள். 
 

click me!