எப்படிலாம் அவுட்டாகலாம்னு புதுசு புதுசா யோசிச்சு அவுட்டாகுறான்யா..! இளம் வீரரை விளாசிய கவாஸ்கர்

By karthikeyan VFirst Published Apr 23, 2021, 5:12 PM IST
Highlights

சஞ்சு சாம்சன் அவுட்டாவதற்கு புது புது வழிகளை கண்டுபிடித்து அவுட்டாவதாக சுனில் கவாஸ்கர் விளாசியுள்ளார்.
 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன். நீண்டகாலமாகவே ஐபிஎல்லில் ராஜஸ்தான் அணிக்காக ஆடிவரும் சஞ்சு சாம்சன், இந்த சீசனில் அந்த அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்துகிறார். 

இந்த சீசனில் இதுவரை ஆடியுள்ள 4 போட்டிகளில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெறும் ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

எல்லா சீசன்களிலுமே முதல் ஒன்றிரண்டு போட்டிகளில் மிகச்சிறப்பாக ஆடிவிட்டு அதன்பின்னர் அந்த சீசன் முழுவதுமே சொதப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ள சஞ்சு சாம்சன், இந்த சீசனிலும் அதையே செய்கிறார். பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் 222 ரன்கள் என்ற கடின  இலக்கை விரட்டும்போது தனி நபராக சதமடித்து 119 ரன்களை குவித்த சஞ்சு சாம்சன், அதன்பின்னர் 3 போட்டிகளிலும் சேர்த்தே மொத்தமாக 26 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.

ஆர்சிபிக்கு எதிரான நேற்றைய போட்டியில், ராஜஸ்தான் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவருமே சொதப்ப, கேப்டன் சஞ்சு சாம்சனும் 21 ரன்னுக்கே வெளியேறினார். சஞ்சு சாம்சன் ஒவ்வொரு சீசனிலும் முதல் போட்டியில் மட்டும் நன்றாக ஆடிவிட்டு அதன்பின்னர் அந்த சீசன் முழுவதும் சொதப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ள சஞ்சு சாம்சனை,  கவாஸ்கர் விளாசியுள்ளார்.

சாம்சன் குறித்து பேசியுள்ள கவாஸ்கர், சஞ்சு சாம்சன் எப்போதுமே அவசரப்படுகிறார். அவுட்டாவதற்கான வழியை கண்டுபிடித்து அவுட்டாகிறார். சாம்சன் மிகச்சிறந்த திறமையான பேட்ஸ்மேன். முறையான ஷாட்டுகளை ஆடினால் சிறந்து விளங்குவார். ஒரு கேப்டனாக அவர் முன்னின்று அணியை வழிநடத்த வேண்டும். தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் தான் அவரால் இந்திய அணியில் நிரந்தரமாக இடம்பிடிக்க முடியவில்லை என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

click me!