திடீரென ஓய்வுபெற்றது ஏன்..? பாக்., வீரர் முகமது ஆமீர் ஓபன் டாக்

By karthikeyan VFirst Published Apr 23, 2021, 4:47 PM IST
Highlights

திடீரென ஓய்வு அறிவித்தது ஏன் என்று பாகிஸ்தான் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் முகமது ஆமீர் தெரிவித்துள்ளார்.
 

சர்வதேச கிரிக்கெட்டில் எல்லா காலக்கட்டத்திலும் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர்கள் பாகிஸ்தான் அணியில் இருந்துள்ளனர். வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷோயப் அக்தர், முகமது ஆமீர், சமி, ஜுனைத் கான் என பல சிறந்த ஃபாஸ்ட் பவுலர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள்.

அப்படிப்பட்ட சிறந்த பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர் முகமது ஆமீர். 2009ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியில் அறிமுகமான ஆமீர், 36 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 119 விக்கெட்டுகளையும், 61 ஒருநாள் போட்டிகளில் ஆடி 81 விக்கெட்டுகளையும், 50 டி20 போட்டிகளில் 59 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ள ஆமீர், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து மட்டும் ஓய்வுபெற்றார்.

வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில்(டி20, ஒருநாள்) கவனம் செலுத்தும் விதமாக டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றதாக ஆமீர் தெரிவித்தார். ஆனால் ஆமீர் சுயநலவாதி என்ற விமர்சனம் எழுந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கிய ஆமீருக்கு ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இடம் கொடுக்காமல் ஒதுக்கியது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

இதையடுத்து உடனடியாக அனைத்துவிதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வு அறிவித்தார் முகமது ஆமீர். மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலரான முகமது ஆமீர், 29 வயதிலேயே ஓய்வு அறிவித்தார். இது கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாகவே இருந்தது.

இந்நிலையில், அதுகுறித்து விளக்கமளித்துள்ள ஆமீர், நான் ஓய்வு அறிவித்ததில் எந்த சுயநலமும் இல்லை. இப்போதைக்கு நான் ஓய்வுமுடிவை திரும்பப்பெற்று கம்பேக் கொடுக்க வாய்ப்பேயில்லை. ஆனால் நிலைமை சரியாகும்போது எதிர்காலத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் ஆடலாம்.

எனக்கு மரியாதை மிக முக்கியம். எனக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கவில்லை. அதனால் தான் ஓய்வுபெற்றேன் என்று முகமது ஆமீர் தெரிவித்துள்ளார்.
 

click me!