வெற்றி முனைப்புடன் மோதும் #PBKSvsMI இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Apr 23, 2021, 3:08 PM IST
Highlights

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த சீசனில் இரு அணிகளுமே இதுவரை தலா 4 போட்டிகளில் ஆடியுள்ளன. அதில் மும்பை இந்தியன்ஸ் 2 வெற்றிகளையும், பஞ்சாப் கிங்ஸ் ஒரு வெற்றியையும் பெற்றுள்ளன.

இரு அணிகளுமே கடைசியாக ஆடிய போட்டியில் தோல்வியடைந்த நிலையில், வெற்றி முனைப்பில் இன்று மோதுகின்றன. சென்னையில் நடக்கும் இந்த போட்டியில் இரு அணிகளுமே, கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும்.

பஞ்சாப் கிங்ஸ் கடந்த போட்டியிலேயே 2 மாற்றங்களை செய்துவிட்டது. கடந்த போட்டியில் வெளிநாட்டு ஃபாஸ்ட்பவுலர்களான ஜெய் ரிச்சர்ட்ஸன், மெரிடித் ஆகிய இருவரும் நீக்கப்பட்டு மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ் மற்றும் ஃபேபியன் ஆலன் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டனர். இந்த போட்டியிலும் கடந்த போட்டியில் ஆடிய அதே காம்பினேஷன் தான் ஆடும்.

உத்தேச பஞ்சாப் கிங்ஸ் அணி:

கேஎல் ராகுல்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மயன்க் அகர்வால், கெய்ல், பூரன், தீபக் ஹூடா, மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ், ஷாருக்கான், ஃபேபியன் ஆலன், முருகன் அஷ்வின், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.

மும்பை இந்தியன்ஸ் அணி:

டி காக்(விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா(கேப்டன்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு, க்ருணல் பாண்டியா, ராகுல் சஹார், ஜெயந்த் யாதவ், போல்ட், பும்ரா.
 

click me!