#IPL2021 சாம்பியன் டீமுங்க அவங்க..! சிஎஸ்கேவின் நகர்வுகளை அணு அணுவா புகழ்ந்த கவாஸ்கர்

By karthikeyan VFirst Published May 15, 2021, 4:54 PM IST
Highlights

சிஎஸ்கே அணியை சாம்பியன் அணி என்று முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் புகழ்ந்துள்ளார்.
 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் 13வது சீசனில் சிஎஸ்கே அணி படுமோசமாக ஆடியது. பேட்டிங், பவுலிங் இரண்டிலுமே சொதப்பிய சிஎஸ்கே அணி, லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் 7ம் இடத்தை பிடித்து லீக் சுற்றிலேயே வெளியேறியது. ஐபிஎல்லில் முதல் முறையாக பிளே ஆஃபிற்கு முன்னேறாமல் கடந்த சீசனில் தான்  வெளியேறியது சிஎஸ்கே.

இதையடுத்து, சிஎஸ்கே அணியில் வயதான வீரர்கள் அதிகம் இருந்ததை, டேட்ஸ் ஆர்மி என்று பலர் கிண்டல் செய்தனர். ஆனால் கடந்த சீசனுக்கு நேர்மாறாக மிக அபாரமாக இந்த சீசனில் ஆடியது சிஎஸ்கே அணி. அபாரமான பேட்டிங், அருமையான பவுலிங் என அசத்திய சிஎஸ்கே அணி, 14வது சீசனின் முதல் பாதியில் ஆடிய 7 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது.

கடந்த சீசனில் படுமட்டமாக சொதப்பிய சிஎஸ்கே அணி, ஆறே மாத இடைவெளியில், கிட்டத்தட்ட அதே அணியுடன் களமிறங்கி, இந்த சீசனில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியது. 

இந்நிலையில், அதுகுறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர், கடந்த சீசனில் மற்ற அணிகள் டாப் ஃபார்மில் நன்றாக ஆடிய நிலையில், சாம்பியன் அணியான சிஎஸ்கே மட்டும் சொதப்பியது. கடந்த சீசனில் சொதப்பிய சிஎஸ்கே அணி, பெரியளவில் மாற்றங்கள் எல்லாம் செய்யாமல் கிட்டத்தட்ட அதே அணியுடன் களமிறங்கி இந்த சீசனில் சிறப்பாக ஆடியது. மொயின் அலியை 3ம் வரிசையில் இறக்கியது சிறந்த முடிவு. இடது கை பேட்ஸ்மேனான மொயின் அலி சில சிறந்த இன்னிங்ஸ்களை ஆடினார்.

ஃபாஃப் டுப்ளெசிஸ் செம ஃபார்மில் தெறிக்கவிட்டார். ருதுராஜ் கெய்க்வாட் அவருடன் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். சாம் கரன் ஒவ்வொரு போட்டியிலும் மேம்பட்டு அனைவரையும் கவர்கிறார். டெத் ஓவர் பவுலிங்கும் வலுவடைந்துள்ளது என்று சிஎஸ்கேவை புகழ்ந்தார் கவாஸ்கர்.
 

click me!