#IPL2021 ஆறே மாசத்துல இவ்வளவு பெரிய எழுச்சியா..? சிஎஸ்கே அணியை கண்டு மிரண்டுபோன முன்னாள் வீரர்

By karthikeyan VFirst Published May 15, 2021, 2:42 PM IST
Highlights

ஐபிஎல் 13வது சீசனில் படுமோசமாக ஆடிய சிஎஸ்கே, 14வது சீசனில் ஆடிய விதத்தை கண்டு வியந்து புகழ்ந்துள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா.
 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் 13வது சீசனில் சிஎஸ்கே அணி படுமோசமாக ஆடியது. பேட்டிங், பவுலிங் இரண்டிலுமே சொதப்பிய சிஎஸ்கே அணி, லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் 7ம் இடத்தை பிடித்து லீக் சுற்றிலேயே வெளியேறியது. ஐபிஎல்லில் முதல் முறையாக பிளே ஆஃபிற்கு முன்னேறாமல் கடந்த சீசனில் தான்  வெளியேறியது சிஎஸ்கே.

இதையடுத்து, சிஎஸ்கே அணியில் வயதான வீரர்கள் அதிகம் இருந்ததை, டேட்ஸ் ஆர்மி என்று பலர் கிண்டல் செய்தனர். ஆனால் கடந்த சீசனுக்கு நேர்மாறாக மிக அபாரமாக இந்த சீசனில் ஆடியது சிஎஸ்கே அணி. அபாரமான பேட்டிங், அருமையான பவுலிங் என அசத்திய சிஎஸ்கே அணி, 14வது சீசனின் முதல் பாதியில் ஆடிய 7 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது.

கடந்த சீசனில் படுமட்டமாக சொதப்பிய சிஎஸ்கே அணி, ஆறே மாத இடைவெளியில் அபாரமான எழுச்சி பெற்று, இந்த சீசனில் மிகச்சிறப்பாக ஆடியது அனைவருக்குமே வியப்புதான். அதுகுறித்துத்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசியுள்ளார்.

சிஎஸ்கேவின் எழுச்சி குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, ஐபிஎல் 2020 மற்றும் ஐபிஎல் 2021க்கு இடையே மிகப்பெரிய வித்தியாசம். 2020ல் டேட்ஸ் ஆர்மி மாதிரி ஆடிய சிஎஸ்கே, இந்த சீசனில் சூப்பர் பவராக ஆடுகிறது. கிங்ஸ், சூப்பர் கிங்ஸ் ஆகிவிட்டது. வெறும் ஆறே மாதத்தில் இதுமாதிரியான ஒரு எழுச்சியை யாருமே எதிர்பார்க்கவில்லை. 

கடந்த சீசனில் சிக்ஸர்கள் அடிக்க முடியாமல் திணறிய சிஎஸ்கே அணி, இந்த சீசனில் சிக்ஸர் மழை பொழிந்தது. அதுதான் அந்த அணியின் வெற்றிகளுக்கு காரணம். கடந்த சீசனில் மொத்தமாகவே 75 சிக்ஸர்கள் மட்டுமே விளாசிய சிஎஸ்கே அணி, இந்த சீசனில் வெறும் ஏழே போட்டிகளில் 62 சிக்ஸர்களை விளாசிவிட்டது என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார்.
 

click me!