#IPL2021 ராஜஸ்தான் ராயல்ஸ், சிஎஸ்கே அணிகளுக்கு மரண அடி..!

By karthikeyan VFirst Published May 14, 2021, 9:10 PM IST
Highlights

ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் ஆடமாட்டார்கள் என்ற தகவல் வெளியான நிலையில், அதனால் கடுமையாக பாதிக்கப்படப்போவது ராஜஸ்தான் ராயல்ஸும் சிஎஸ்கேவும் தான் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசனில் 29 லீக் போட்டிகள் நடந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. எஞ்சிய போட்டிகள் வரும் செப்டம்பரில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதையடுத்து, வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் அவரவர் நாட்டிற்கு திரும்பிவிட்டனர். இந்நிலையில், எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை செப்டம்பரில் நடத்தினால், இங்கிலாந்து வீரர்கள் அதில் ஆடமுடியாத நிலையில் உள்ளனர்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்தில் முடித்துவிட்டு, செப்டம்பர் - அக்டோபரில் இங்கிலாந்து அணி பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு சென்று ஆடவுள்ளது. எனவே அந்த சுற்றுப்பயணங்களுக்கு தங்கள் அணியின் அனைத்து வீரர்களுடன் முழு பலத்துடன் செல்லும் முனைப்பில் இங்கிலாந்து அணி நிர்வாகம் உள்ளது. 

அதன்பின்னர் டி20 உலக கோப்பை, ஆஷஸ் தொடர் ஆகியவையும் இருப்பதால் வீரர்களின் பணிச்சுமை மீது கவனம் செலுத்த வேண்டிய அவசியமும் இருப்பதால், ஐபிஎல்லில் ஆட தங்கள் வீரர்களை அனுமதிக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தயாராக இல்லை. பென் ஸ்டோக்ஸும் அதே கருத்தைத்தான் தெரிவித்திருந்தார்.

பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், பட்லர், பேர்ஸ்டோ, மொயின் அலி, சாம் கரன், டேவிட் மலான், ஜேசன் ராய் உள்ளிட்ட இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல்லில் ஆடிவரும் நிலையில், இங்கிலாந்து வீரர்கள் ஆடவில்லை என்றால், அது எந்த அணிக்கு பாதிப்பாக அமையும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள ஆகாஷ் சோப்ரா, ஆகாஷ் சோப்ரா ஆகாஷ் சோப்ரா, இங்கிலாந்து வீரர்கள் ஆடவில்லை என்றால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குத்தான் பெரும் பாதிப்பு. 

அடுத்த பாதிப்பு சிஎஸ்கேவிற்கு. மொயின் அலி மற்றும் சாம் கரன் ஆகிய இருவரும் முக்கியமான வீரர்கள். மொயின் அலி 3ம் வரிசையில் பேட்டிங் ஆடுகிறார். பவுலிங்கும் வீசுவார். சாம் கரன் புதிய பந்தில் அருமையாக வீசுவார். டெத் ஓவர்களில் அடித்தும் ஆடுவார். எனவே மொயின் அலி மற்றும் சாம் கரனை இழப்பது சிஎஸ்கேவிற்கும் பெரும் பாதிப்பு என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
 

click me!