கேகேஆர் அணியில் ஆடிய இங்கி., ஃபாஸ்ட் பவுலர் ஓய்வு

By karthikeyan VFirst Published May 14, 2021, 7:01 PM IST
Highlights

இங்கிலாந்தின் இடது கை ஃபாஸ்ட் பவுலர் ஹாரி கர்னி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளார்.
 

இங்கிலாந்து அணியின் இடது கை ஃபாஸ்ட் பவுலர் ஹாரி கர்னி. 2014ம் ஆண்டு இங்கிலாந்து அணியில் அறிமுகமான ஹாரி கர்னி, அந்த ஒரே ஆண்டில் இங்கிலாந்து அணிக்காக 10 சர்வதேச ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகளில் ஆடி முறையே, 11 மற்றும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

காயம் காரணமாக அவரால் இங்கிலாந்து அணியில் நிரந்தர இடம் பிடிக்க முடியவில்லை. 2014ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான கர்னி, அதே ஆண்டில் தான் அவரது கடைசி சர்வதேச போட்டியையும் ஆடினார். சர்வதேச கிரிக்கெட்டில் சோபிக்காத கர்னி, உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஜாம்பவான்.

நாட்டிங்காம்ஷைர் அணியை சேர்ந்த கர்னி, 103 முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலும் 93 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் 156 டி20 போட்டிகளிலும் ஆடி மொத்தமாக 614 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

2019ம் ஆண்டு ஒரே சீசனில் கேகேஆர் அணிக்காக ஆடிய கர்னி, 8 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இந்நிலையில் 34 வயதான ஹாரி கர்னி இன்று ஓய்வு அறிவித்தார்.
 

click me!