மைக் ஹசிக்கு கொரோனா நெகட்டிவ்.. விரைவில் ஆஸி.,க்கு பறக்கிறார்

By karthikeyan VFirst Published May 14, 2021, 6:58 PM IST
Highlights

சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளரான ஆஸி., முன்னாள் வீரர் மைக் ஹசி கொரோனாவிலிருந்து மீண்டுவிட்டார்.
 

ஐபிஎல்லில் ஆடிய வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு கொரோனா உறுதியானதால், ஐபிஎல் 14வது சீசன் பாதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. எஞ்சிய போட்டிகளை செப்டம்பரில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

அப்படி கொரோனா பாசிட்டிவ் என்று வந்த சிலரில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசியும் ஒருவர். மைக் ஹசிக்கு கொரோனா பாசிட்டிவ் என்பதால், அவர் சென்னையில் சிகிச்சை பெற்றுவந்ததால் மற்ற ஆஸ்திரேலியர்கள் அனைவரும் ஆஸி., செல்வதற்காக மாலத்தீவுக்கு சென்ற நிலையில், ஹசி மட்டும் சென்னையில் இருந்தார்.

ஒரு வாரத்திற்கு முன் மைக் ஹசிக்கு கொரோனா நெகட்டிவ் என வந்தது. ஆனாலும் தனிமையில் தான் இருந்தார் மைக் ஹசி. தான் குணமடைந்துவிட்டதாக அவரே தெரிவித்தும் இருந்த நிலையில், 2 நாட்களுக்கு முன் மீண்டும் கொரோனா பாசிட்டிவ் என்று வந்தது.

தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்டுவந்த நிலையில், இப்போது மீண்டும் கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது. ஹசிக்கு கொரோனா நெகட்டிவ் என்று வந்துவிட்டதாகவும், அவர் கொரோனாவிலிருந்து முழுவதுமாக மீண்டுவிட்டதாகவும், ஆனாலும் அவர் ஆஸி.,க்கு புறப்படுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் சிஎஸ்கே சி.இ.ஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
 

click me!