#INDvsENG இந்த மாதிரி பிட்ச்சுல ஸ்கோர் செய்யுறவன் தான் உண்மையான பேட்ஸ்மேன்..! சுனில் கவாஸ்கர் அதிரடி

By karthikeyan VFirst Published Feb 27, 2021, 5:03 PM IST
Highlights

இந்தியாவில் இருப்பன போன்ற ஸ்பின்னிற்கு சாதகமான பிட்ச்களில் ஸ்கோர் செய்பவர்கள் தான் உண்மையான பேட்ஸ்மேன்கள் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

இந்தியா இங்கிலாந்து இடையே அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டி, 2ம் நாளே முடிந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டி, 2ம் நாளே முடிந்தது அனைவருக்கும் வியப்பளித்தது. இந்த போட்டியில் முழுக்க முழுக்க ஸ்பின்னர்களே ஆதிக்கம் செலுத்தினர்.

இந்திய அனியின் இடது கை ஸ்பின்னர் அக்ஸர் படேல், 11 விக்கெட்டுகளையும், சீனியர் ஸ்பின்னர்  அஷ்வின் 7விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இங்கிலாந்து அணி கேப்டனும் ஆஃப் ஸ்பின்னருமான ஜோ ரூட் 5 விக்கெட்டுகளையும், ஜாக் லீச்  4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த போட்டியில் மொத்தம் 30 விக்கெட்டுகள் விழுந்தன. அதில் 28 விக்கெட்டுகள் ஸ்பின்னர்கள் வீழ்த்தியவை.

ஆனால் அனைத்து பேட்ஸ்மேன்களுமே திணறிய இதே ஆடுகளத்தில் ரோஹித் சர்மா சிறப்பாக ஆடி முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்து 66 ரன்கள் விளாசியதோடு, 2வது இன்னிங்ஸிலும் 25 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். அகமதாபாத் ஆடுகளத்தை விமர்சித்தவர்களுக்கு, அது பேட்டிங் ஆட சிறந்து பிட்ச் தான் என்றும் ஆனால் கவனமாக பேட்டிங் ஆட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அகமதாபாத் மாதிரியான ஸ்பின்னிற்கு சாதகமான பிட்ச்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஜாம்பவானும் தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர், ஸ்பின்னை சமாளித்து ஆட க்ரீஸை நன்கு பயன்படுத்த வேண்டும்.  இங்குதான் உங்களது கால்நகர்வுகள் பயன்படும். ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமான, பந்து நன்றாக பவுன்ஸ் ஆகும் ஆடுகளங்களில் பேட்டிங் ஆட துணிச்சல் வேண்டும்.  

ஆனால் அதேவேளையில், பந்து நன்றாக திரும்பக்கூடிய ஸ்பின்னிற்கு சாதகமான ஆடுகளங்களில் ஆட திறமை வேண்டும். இந்த மாதிரியான ஆடுகளங்கள் தான் உண்மையாகவே திறமையை பரிசோதிப்பவை. எனவே பந்து நன்றாக திரும்பும் ஆடுகளங்களில் நிறைய ஸ்கோர் செய்யும் பேட்ஸ்மேன்கள் தான் உண்மையான பேட்ஸ்மேன்கள் என்று கவாஸ்கர் தெரிவித்தார்.
 

click me!