தேவ்தத் படிக்கல் அபார சதம்.. கேரளாவை அசால்ட்டா ஊதித்தள்ளிய கர்நாடகா

By karthikeyan VFirst Published Feb 26, 2021, 9:40 PM IST
Highlights

தேவ்தத் படிக்கல்லின் அபார சதத்தால் விஜய் ஹசாரே தொடரில் கேரளாவுக்கு எதிரான போட்டியில் கர்நாடக அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 

விஜய் ஹசாரே தொடரில் கர்நாடகா மற்றும் கேரளா அணிகளுக்கு இடையேயான போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற கர்நாடக அணி கேரளாவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய கேரள அணியில் சாம்சன், உத்தப்பா ஆகிய வீரர்கள் சரியாக ஆடவில்லை. இக்கட்டான நிலையில் இருந்த கேரள அணியை வத்சாய் கோவிந்த் சிறப்பாக ஆடி காப்பாற்றினார். சிறப்பாக ஆடிய கோவிந்த் 95 ரன்கள் அடித்து 5 ரன்னில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார்.  

சச்சின் பேபி மற்றும் அசாருதீன் ஆகிய இருவரும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். சச்சின் பேபி 55 ரன்னில் ஆட்டமிழந்தார். அசாருதீன் 59 ரன்கள் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருக்க, 50 ஓவரில் 277 ரன்களை குவித்தது கேரளா அணி.

278 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய கர்நாடக அணியின் தொடக்க வீரர்கள் தேவ்தத் படிக்கல் மற்றும் ரவிகுமார் சமர்த் ஆகிய இருவரும் இணைந்து சிறப்பாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அபாரமாக ஆடி அரைசதம் அடித்த ரவிகுமார் 62 ரன்னில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு படிக்கல்லும் ரவிகுமாரும் இணைந்து 99 ரன்களை சேர்த்தனர்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய தேவ்தத் படிக்கல் சதமடித்தார். 3ம் வரிசையில் இறங்கிய கிருஷ்ணமூர்த்தி சித்தார்த்தும் படிக்கல்லுடன் இணைந்து அபாரமாக ஆடினார். இருவருமே சிறப்பாக ஆடி 46வது ஓவரிலேயே இலக்கை எட்டி போட்டியை முடித்தனர். படிக்கல் 126 ரன்கள் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்கவில்லை. சித்தார்த்தும் 86 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து போட்டியை முடித்து கொடுத்ததையடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது கர்நாடக அணி.
 

click me!