ஜார்க்கண்ட்டை வீழ்த்தி கம்பேக் கொடுத்த தமிழ்நாடு..! தொடர்ந்து அசத்தும் ஷாருக்கான்

By karthikeyan VFirst Published Feb 26, 2021, 6:08 PM IST
Highlights

விஜய் ஹசாரே தொடரில் தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வியை தழுவிய தமிழ்நாடு அணி, ஜார்க்கண்ட்டை வீழ்த்தி மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளது.
 

விஜய் ஹசாரே தொடரை வெற்றிகரமாக தொடங்கிய தமிழ்நாடு அணி, ஆந்திரா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது. இந்நிலையில், இன்று ஜார்க்கண்ட்டை எதிர்கொண்ட இந்திய அணி, அபாரமாக ஆடி வெற்றி பெற்றது.

இந்தூரில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய தமிழ்நாடு அணி, தொடக்க வீரராக இறங்கிய பாபா அபரஜித்(57), ஷாருக்கான்(51), கௌசிக்(55) ஆகிய மூவரின் அரைசதம் மற்றும் ஜெகதீசன்(30), சாய் கிஷோர், எம்.முகமது ஆகியோரின் பொறுப்பான பேட்டிங்கால் 50 ஓவரில் 266 ரன்கள் அடித்தது தமிழ்நாடு அணி.

சையத் முஷ்டாக் அலி தொடரில் சிறப்பாக ஆடி, தமிழ்நாடு அணிக்காக பல போட்டிகளை வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்துகொடுத்த ஃபினிஷர் ஷாருக்கான், விஜய் ஹசாரே தொடரிலும் கிட்டத்தட்ட அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக ஆடிவருகிறார். மத்திய பிரதேசத்துக்கு எதிரான போட்டியில் கூட தனி ஒருவனாக இலக்கை விரட்டினார். இந்நிலையில், இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார் ஷாருக்கான்.

267 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஜார்க்கண்ட் அணியில் விராட் சிங்(49), சுமித் குமார்(40) ஆகிய 2 பேட்ஸ்மேன்கள் மட்டுமே நன்றாக ஆடினர். 11வது வீரராக இறங்கிய ராகுல் சுக்லா சிறப்பாக ஆடி 42 ரன்கள் அடித்தார். ஆனாலும் அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் இஷான் கிஷன், உத்கர்ஷ் சிங், குமார் தியோப்ரத் ஆகியோர் ரன்னே அடிக்காமல் மற்றும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறியதால், பின்வரிசை வீரர்கள் போராடியபோதிலும் அந்த அணியால் 50 ஓவரில் 199 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதையடுத்து 67 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்றது.
 

click me!