அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு அறிவித்தார் அதிரடி மன்னன் யூசுஃப் பதான்..!

By karthikeyan VFirst Published Feb 26, 2021, 5:15 PM IST
Highlights

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு அறிவித்தார் யூசுஃப் பதான்.
 

சர்வதேச கிரிக்கெட்டில் 2007ம் ஆண்டு அறிமுகமான அதிரடி பேட்ஸ்மேனும் நல்ல ஸ்பின்னருமான சிறந்த ஆல்ரவுண்டர் யூசுஃப் பதான். இந்திய அணி 2007ல் டி20 உலக கோப்பையை வென்றபோது அணியில் ஆடியவர்.

இந்திய அணிக்காக 57 சர்வதேச ஒருநாள் மற்றும் 22 டி20 போட்டிகளில் ஆடியுள்ள யூசுஃப் பதான் முறையே, 810 மற்றும் 236 ரன்கள் அடித்துள்ளார். பின்வரிசையில் இறங்கி இந்திய அணிக்கு ஃபினிஷர் ரோல் செய்ததால் அவரால் அதிக ரன்கள் குவிக்க முடியவில்லை. ஆனாலும் டெத் ஓவர்களில் காட்டடி அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவும் வகையில் பல அருமையான இன்னிங்ஸ்களை ஆடியுள்ளார் யூசுஃப் பதான்.

2012ம் ஆண்டுக்கு பிறகு 9 ஆண்டுகளாக இந்திய அணியில் யூசுஃப் பதான் ஆடவில்லை. 2012ல் ஆடியதுதான் கடைசி. அதன்பின்னர் இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.

ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ், கேகேஆர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளில் ஆடிய யூசுஃப் பதானை, 2019 ஐபிஎல்லுக்கு பின்னர் சன்ரைசர்ஸ் கழட்டிவிட, கடந்த சீசனில் யூசுஃப் பதான் ஆடவில்லை. இந்த சீசனிலும் இல்லை. இனிமேல் ஐபிஎல்லில் ஆடவும் வாய்ப்பேயில்லை.

இந்நிலையில், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் யூசுஃப் பதான். சர்வதேச கிரிக்கெட், உள்நாட்டு கிரிக்கெட், ஐபிஎல் உள்ளிட்ட அனைத்துவிதமான கிரிக்கெட்டிலும் ஓய்வறிவித்தார் யூசுஃப் பதான்.
 

click me!