ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்.. மும்பை நிர்ணயித்த கடின இலக்கை விரட்டும் ராஜஸ்தான்

Published : Feb 27, 2021, 03:34 PM IST
ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்.. மும்பை நிர்ணயித்த கடின இலக்கை விரட்டும் ராஜஸ்தான்

சுருக்கம்

ஷ்ரேயாஸ் ஐயரின் அபார சதத்தால் மும்பை அணி நிர்ணயித்த கடின இலக்கை ராஜஸ்தான் அணி விரட்டிவருகிறது.  

விஜய் ஹசாரே தொடரில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி ஜெய்ப்பூரில் நடந்துவருகிறது. முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணியின் மிடில் ஆர்டர் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் அபாரமாக ஆடி சதமடித்தார்.

இந்த தொடரில் அபாரமாக ஆடி, சதம் மற்றும் இரட்டை சதமடித்த மும்பை அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான பிரித்வி ஷா இந்த போட்டியில் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். யசஸ்வி ஜெய்ஸ்வால் 38 ரன்களும் சூர்யகுமார் யாதவ் மற்றும் சர்ஃபராஸ் கான் ஆகியோர் முறையே 29 மற்றும் 30 ரன்களும் அடித்தனர்.

சிறப்பாக ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர் 103 பந்தில் 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 116 ரன்கள் அடிக்க, மும்பை அணி 50 ஓவரில் 317 ரன்களை குவித்தது. 318 ரன்கள் என்ற இலக்கை ராஜஸ்தான் விரட்டிவருகிறது. ராஜஸ்தான் அணியின் மஹிபால் லோம்ரார் அரைசதம் கடந்து இலக்கை விரட்டிய நிலையில், அவர் 76 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் ஆட்டம் மும்பையின் பக்கம் திரும்பியுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

IND vs NZ T20: பேட்டிங் ஸ்டைலை மாற்றுகிறாரா சூர்யகுமார்?.. அவரே சொன்ன அதிரடி பதில்!
IND VS NZ முதல் டி20.. ஷ்ரேயாஸ் ஐயர் இடத்துக்கு 'ஆப்பு' வைத்த இளம் வீரர்.. பிளேயிங் லெவன்!