#ICCWTC ஃபைனல்: டாஸ் போடுறதுக்கு முன் கடைசி நேரத்தில் அவரை தூக்கிட்டு இவர் சேர்க்கப்படலாம் - கவாஸ்கர்

By karthikeyan VFirst Published Jun 18, 2021, 10:11 PM IST
Highlights

டாஸ் போடுவதற்கு முன்புவரை எந்த நிமிடமும் இந்திய அணியின் ஆடும் லெவனிலிருந்து யார் வேண்டுமானால் நீக்கப்படலாம் அல்லது சேர்க்கப்படலாம் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் இன்று தொடங்கியிருக்க வேண்டியது. சவுத்தாம்ப்டனில் இன்று மழை பெய்ததால், பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டிய போட்டி, காலதாமதமானது. மழை விட்டு விட்டு தொடர்ந்து பெய்ததால், முதல் நாள் ஆட்டம் முழுவதும் ரத்து செய்யப்பட்டது.

இந்த போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன் நேற்று அறிவிக்கப்பட்டது. 6 பேட்ஸ்மேன்கள், 5 பவுலர்கள் என்ற காம்பினேஷனுடன் இந்திய அணி ஆடவுள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், இஷாந்த் சர்மா, ஷமி, பும்ரா.

சவுத்தாம்ப்டனில் மழை பெய்வதால் கண்டிஷன் மந்தமாகவே இருக்கிறது. அதனால் ஸ்பின் பவுலிங்கிற்கு ஆடுகளத்தில் ஒத்துழைப்பு இருக்காது. எனவே ஒரு ஸ்பின்னருக்கு பதிலாக(பெரும்பாலும் ஜடேஜா) கூடுதல் பேட்ஸ்மேன் ஒருவர்(ஹனுமா விஹாரி) சேர்க்கப்படலாம் என்று கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள கவாஸ்கர்,  இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அது இறுதியான அணி அல்ல. கேப்டன்கள் அணி வீரர்கள் ஷீட்டை பகிர்ந்துகொள்ளும் வரை எதுவும் இறுதியானது அல்ல. கடைசி நேரத்தில் என்ன மாற்றம் வேண்டுமானாலும் செய்யப்படலாம். எதிரணியின் ஆடும் லெவனை பார்த்துவிட்டு அதற்கேற்ப அணியில் மாற்றங்கள் செய்யப்படலாம். 

எனவே டாஸ் போடுவதற்கு முன் எப்போது வேண்டுமானாலும் அணி காம்பினேஷன் மாற்றப்படும். இங்கிலாந்தின் இப்போதைய கண்டிஷன் நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர்களுக்கு சாதகமாக இருக்கும். எனவே 6ம் வரிசையிலிருந்து ரிஷப் பண்ட் 7ம் வரிசைக்கு தள்ளப்பட்டு, 6ம் வரிசையில் ஒரு பேட்ஸ்மேன் இறக்கப்படலாம். ஒரு ஸ்பின்னர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் சேர்க்கப்படலாம் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

click me!