#ICCWTC ஃபைனல்: முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் ரத்து..! ரசிகர்களுக்கு ஏமாற்றம்

Published : Jun 18, 2021, 07:36 PM IST
#ICCWTC ஃபைனல்: முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் ரத்து..! ரசிகர்களுக்கு ஏமாற்றம்

சுருக்கம்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் முழுவதுமாகவே மழையால் ரத்தானது.  

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இன்று தொடங்கவிருந்தது. சமபலம் வாய்ந்த சிறந்த அணிகளான விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதுவதால் இந்த போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சவுத்தாம்ப்டனில் இன்று பிற்பகல் இந்திய நேரப்படி 3 மணிக்கு போட்டி தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக டாஸ் தாமதமானது. விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்ததால் உணவு இடைவேளை வரை ஒத்திவைக்கப்பட்டது. 

அதன்பின்னரும் மழை நீடித்ததால் முதல் நாள் ஆட்டம் முழுவதும் ரத்து செய்யப்பட்டது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மழை குறுக்கீட்டால் போட்டி முடிவு கிடைக்காமல் போவதை தடுக்க, 6வது நாள் ரிசர்வ் நாளாக உள்ளது. இன்றைய ஒருநாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டதால், எஞ்சிய 4 நாட்கள் ஆட்டத்தில் முடிவு கிடைக்காத பட்சத்தில் ரிசர்வ் டே ஆட்டம் நடைபெறும்.

முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.
 

PREV
click me!

Recommended Stories

India Vs Ireland 1st T20: வைபவ் சூர்யவன்ஷிக்காக அதிரடி மன்னன் நீக்கம்! இந்திய அணி பிளேயிங் லெவன்!
India vs Ireland: அயர்லாந்து தொடர்: இளம் இந்திய அணியிடம் எதிர்பார்க்கப்படும் 5 விஷயங்கள்!