#PSL உஸ்மான் கவாஜா அதிரடி சதம்.. ஆசிஃப் அலி, முன்ரோ காட்டடி..! 20 ஓவரில் 247 ரன்களை குவித்த இஸ்லாமாபாத் அணி

Published : Jun 17, 2021, 08:42 PM IST
#PSL உஸ்மான் கவாஜா அதிரடி சதம்.. ஆசிஃப் அலி, முன்ரோ காட்டடி..! 20 ஓவரில் 247 ரன்களை குவித்த இஸ்லாமாபாத் அணி

சுருக்கம்

உஸ்மான் கவாஜாவின் அதிரடி சதத்தால் 20 ஓவரில் 247 ரன்களை குவித்தது இஸ்லாமாபாத் யுனைடெட் அணி.  

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இஸ்லாமாபாத் யுனைடெட் மற்றும் பெஷாவர் ஸால்மி அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெஷாவர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இஸ்லாமாபாத் அணியின் தொடக்க வீரர்கள் உஸ்மான் கவாஜா மற்றும் காலின் முன்ரோ ஆகிய இருவரும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய முன்ரோ 28 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 48 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் களத்திற்கு வந்து உஸ்மான் கவாஜாவுடன் இணைந்த ஆசிஃப் அலி, 14 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களை விளாசி 43 ரன்களை குவித்து, மளமளவென அணியின் ஸ்கோரை உயர்த்திவிட்டு ஆட்டமிழந்தார்.

ஒருமுனையில் நிலைத்து நின்று அதிரடியாக ஆடி சதமடித்த உஸ்மான் கவாஜா 56 பந்தில் 13 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 104 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்றார். அவருடன் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பிரண்டன் கிங் 22 பந்தில் 46 ரன்களை விளாச, 20 ஓவரில் 247 ரன்களை குவித்தது இஸ்லாமாபாத் யுனைடெட் அணி.

248 ரன்கள் என்ற மிகக்கடினமான இலக்கை பெஷாவர் அணி விரட்டிவருகிறது.
 

PREV
click me!

Recommended Stories

ஓபனிங் முதல் பினிஷிங் வரை.. இந்திய அணியில் இடம் பிடிக்க புதிய அவதாரமெடுத்த இஷான் கிஷன்
விஜய் ஹசாரே தொடரில் அதிரடி சதம்.. கம்பீரை கழுவி கழுவி ஊற்றும் ரோகித், கோலி ரசிகர்கள்