#ICCWTC ஃபைனல்: ஜடேஜா வேண்டாம்.. அவருக்கு பதிலா இவரை எடுத்துக்கலாம்.. இர்ஃபான் பதான் தேர்வு செய்த இந்திய அணி

Published : Jun 17, 2021, 07:50 PM IST
#ICCWTC ஃபைனல்: ஜடேஜா வேண்டாம்.. அவருக்கு பதிலா இவரை எடுத்துக்கலாம்.. இர்ஃபான் பதான் தேர்வு செய்த இந்திய அணி

சுருக்கம்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணியில் ஜடேஜாவை எடுக்க தேவையில்லை என்றும் அவருக்கு பதிலாக கூடுதல் பேட்ஸ்மேனாக ஹனுமா விஹாரியை எடுக்க வேண்டும் என்று இர்ஃபான் பதான் தனது தேர்வை செய்துள்ளார்.  

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் நாளை (18ம் தேதி) தொடங்குகிறது. சவுத்தாம்ப்டனில் நடக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. சமபலம் வாய்ந்த 2 மிகச்சிரந்த அணிகள் மோதுவதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துவிட்டது. இந்நிலையில், ஃபைனலுக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை முன்னாள் வீரர்கள் பலரும் தேர்வு செய்துவரும் நிலையில் இர்ஃபான் பதானும் தனது அணியை தேர்வு செய்துள்ளார்.

வெங்கடேஷ் பிரசாத், தீப்தாஸ் குப்தா உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் அனைவருமே ஜடேஜா, அஷ்வின் ஆகிய இருவருமே ஆட வேண்டும் என்றுதான் கருத்து தெரிவித்தனர். ஆனால் இர்ஃபான் பதான் மட்டும், பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா மற்றும் அஷ்வின் ஆகிய 4 பவுலர்களுடன் மட்டுமே ஆடினால் போதும். ஜடேஜா அணியில் தேவையில்லை. அவருக்கு பதிலாக கூடுதல் பேட்ஸ்மேனாக ஹனுமா விஹாரியை எடுக்கலாம் என்று இர்ஃபான் பதான் கூறியுள்ளார்.

இர்ஃபான் பதான் தேர்வு செய்த அணி:

ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஹனுமா விஹாரி, அஷ்வின், இஷாந்த் சர்மா, ஷமி, பும்ரா.
 

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!