#ICCWTC ஃபைனல்: இந்திய அணியை எதிர்கொள்ளும் உத்தேச நியூசிலாந்து அணி

By karthikeyan VFirst Published Jun 17, 2021, 6:15 PM IST
Highlights

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான உத்தேச நியூசிலாந்து அணியை பார்ப்போம்.
 

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. சவுத்தாம்ப்டனில் நாளை(18ம் தேதி) முதல் இந்த போட்டி நடக்கவுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி ஆகிய 2 அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால், போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.

ஃபைனலுக்கு முன், இங்கிலாந்துக்கு எதிராக ஆடிய 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என வென்றது நியூசிலாந்து அணிக்கு பெரும் உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளித்திருக்கிறது. அதே நம்பிக்கையுடனும் உத்வேகத்துடனும் இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளது நியூசிலாந்து அணி.

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியில், டாம் லேதம் மற்றும் டெவான் கான்வே ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள். 3ம் வரிசையில் கேப்டன் கேன் வில்லியம்சனும், 4ம் வரிசையில் சீனியர் வீரர் ரோஸ் டெய்லரும் ஆடுவார்கள். 

5ம் வரிசையில் ஆல்ரவுண்டர் ஹென்ரி நிகோல்ஸ் ஆடுவார். விக்கெட் கீப்பர் வாட்லிங். 6 பேட்ஸ்மேன்கள் மற்றும் 5 பவுலர்கள் என்ற காம்பினேஷனுடன் தான் நியூசிலாந்து அணி இறங்கும். அந்தவகையில், ஸ்பின்னராக அஜாஸ் படேல் ஆடுவார். 4 ஃபாஸ்ட் பவுலர்களாக டிம் சௌதி, டிரெண்ட் போல்ட், கைல் ஜாமிசன் மற்றும் நீல் வாக்னர் ஆகிய நால்வரும் ஆடுவார்கள்.

உத்தேச நியூசிலாந்து அணி:

டாம் லேதம்(கேப்டன்), டெவான் கான்வே, கேன் வில்லியம்சன்(கேப்டன்), ரோஸ் டெய்லர், ஹென்ரி நிகோல்ஸ், வாட்லிங்(விக்கெட் கீப்பர்), அஜாஸ் படேல், டிம் சௌதி, டிரெண்ட் போல்ட், கைல் ஜாமிசன், நீல் வாக்னர்.
 

click me!