ஸ்டூவர்ட் பிராட் தேர்வு செய்த ஆல்டைம் டெஸ்ட் லெவன்..! ஒரேயொரு இந்திய வீரருக்கு மட்டுமே இடம்

By karthikeyan VFirst Published Jun 17, 2021, 5:12 PM IST
Highlights

இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர் ஸ்டூவர்ட் பிராட் தேர்வு செய்த ஆல்டைம் டெஸ்ட் லெவனில் ஒரு இந்திய வீரர் மட்டுமே இடம்பெற்றுள்ளார்.
 

இங்கிலாந்து அணியின் சிறந்த டெஸ்ட் பவுலர் ஸ்டூவர்ட் பிராட். ஜேம்ஸ் ஆண்டர்சனுடன் இணைந்து டெஸ்ட் கிரிக்கெட்டில், குறிப்பாக இங்கிலாந்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி குவிக்கும் பவுலர் ஸ்டூவர்ட் பிராட். 
  
இங்கிலாந்து அணிக்காக 148 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 523 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய 6வது சர்வதேச பவுலர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் பிராட்.

ஆல்டைம் பெஸ்ட் டெஸ்ட் பவுலர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ள ஸ்டூவர்ட் பிராட், ஆல்டைம் பெஸ்ட் டெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார்.

இங்கிலாந்தின் அலெஸ்டர் குக் மற்றும் ஆஸி.,யின் மேத்யூ ஹைடன் ஆகிய இருவரையும் தொடக்க வீரர்களாக தேர்வு செய்த ஸ்டூவர்ட் பிராட், 3ம் வரிசை வீரராக ரிக்கி பாண்டிங்கையும், 4ம் வரிசை வீரராக சச்சின் டெண்டுல்கரையும், 5ம் வரிசை வீரராக பிரயன் லாராவையும் தேர்வு செய்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டின் வெற்றிகரமான கேப்டனான ரிக்கி பாண்டிங்கை இந்த அணியில் தேர்வு செய்திருந்த போதிலும், கேப்டனாக அலெஸ்டர் குக்கையே தேர்வு செய்துள்ளார் பிராட். விக்கெட் கீப்பராக இங்கிலாந்தின் மாட் பிரயரையும், ஆல்ரவுண்டராக தென்னாப்பிரிக்காவின் லெஜண்ட் கிரிக்கெட்டர் ஜாக் காலிஸையும் தேர்வு செய்துள்ளார் பிராட்.

ஃபாஸ்ட் பவுலர்களாக மெக்ராத், ரிச்சர்ட் ஹாட்லி, ஆண்டர்சன் ஆகிய மூவரையும், ஸ்பின்னராக ஷேன் வார்னையும் தேர்வு செய்துள்ளார்.

ஸ்டூவர்ட் பிராட் தேர்வு செய்துள்ள ஆல்டைம் டெஸ்ட் லெவன்:

அலெஸ்டர் குக்(கேப்டன்), மேத்யூ ஹைடன், ரிக்கி பாண்டிங், சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா, ஜாக் காலிஸ், மாட் பிரயர்(விக்கெட் கீப்பர்), சர் ரிச்சர்ட் ஹாட்லி, ஷேன் வார்ன், க்ளென் மெக்ராத், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
 

click me!