#PSL குவெட்டா கிளாடியேட்டர்ஸை ஊதித்தள்ளிய முல்தான் சுல்தான்ஸ்..! 110 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி

Published : Jun 17, 2021, 03:48 PM IST
#PSL குவெட்டா கிளாடியேட்டர்ஸை ஊதித்தள்ளிய முல்தான் சுல்தான்ஸ்..! 110 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி

சுருக்கம்

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை 110 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது முல்தான் சுல்தான்ஸ் அணி.  

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் எஞ்சிய போட்டிகள் அபுதாபியில் நடந்துவருகின்றன. முல்தான் சுல்தான்ஸ் மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய முல்தான் சுல்தான்ஸ் அணியின் தொடக்க வீரர் ஷான் மசூத் தொடக்கம் முதலே அடித்து ஆடி அரைசதம் அடித்தார்.  அதிரடியாக ஆடிய மசூத் 42 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 73 ரன்களை குவித்தார். அதன்பின்னர் மிடில் ஆர்டரில் அடித்து ஆடிய சார்லஸ் 24 பந்தில் 47 ரன்களை விளாச, 20 ஓவரில் 183 ரன்களை குவித்தது முல்தான் சுல்தான்ஸ் அணி.

184 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய குவெட்டா அணியில் அதிகபட்சமாகவே தொடக்க வீரர் வெதரால்டு 19 ரன்கள் மட்டுமே அடித்தார். மற்றொரு தொடக்க வீரரான உஸ்மான் கான் 12 ரன்களும், கேப்டன் சர்ஃபராஸ் அகமது 13 ரன்களும் அடித்தனர். முகமது நவாஸ் 10 ரன்கள் அடித்தார். மற்ற அனைத்து வீரர்களுமே ஒற்றை இலக்கத்திலோ அல்லது டக் அவுட்டோ ஆக, 12.1 ஓவரில் வெறும் 73 ரன்களுக்கே ஆல் அவுட்டானது குவெட்டா அணி.

இதையடுத்து 110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது முல்தான் சுல்தான்ஸ் அணி. ஆட்டநாயகனாக ஷான் மசூத் தேர்வு செய்யப்பட்டார்.
 

PREV
click me!

Recommended Stories

Most T20 Centuries: டி20-ல் அதிக சதம்..! கோலியின் சாதனையை சமன் செய்த இளம் வீரர்..!
Abhishek Sharma: டெல்லிக்கு தண்ணி காட்டிய அபிஷேக் சர்மா.. 10 சிக்ஸர்களுடன் செஞ்சுரி..!