அனைத்து ஃபார்மட்டுக்குமான விஸ்டனின் சமகால பெஸ்ட் லெவனில் 4 இந்திய வீரர்கள்..! விராட் கோலி கேப்டன்

Published : Jun 17, 2021, 02:32 PM IST
அனைத்து ஃபார்மட்டுக்குமான விஸ்டனின் சமகால பெஸ்ட் லெவனில் 4 இந்திய வீரர்கள்..! விராட் கோலி கேப்டன்

சுருக்கம்

விஸ்டனின் அனைத்து ஃபார்மட்டுக்குமான சமகால பெஸ்ட் லெவனின் கேப்டனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  

கிரிக்கெட் ஊடகமான விஸ்டன், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய ஃபார்மட்டுகளில் சமகாலத்தின் ஒருங்கிணைந்த பெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளது.

ரோஹித் சர்மா மற்றும்  டேவிட் வார்னர் ஆகிய இருவரையும் தொடக்க வீரர்களாக தேர்வு செய்துள்ள விஸ்டன், 3ம் வரிசையில் விராட் கோலி, 4ம் வரிசையில் கேன் வில்லியம்சன், ஆல்ரவுண்டர்களாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரையும், விக்கெட் கீப்பராக ஜோஸ் பட்லரையும் தேர்வு செய்துள்ளது.

இந்த அணியில் விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன் ஆகிய 2 சிறந்த கேப்டன்கள் இருக்கும் நிலையில், விராட் கோலியையே கேப்டனாக தேர்வு செய்துள்ளது விஸ்டன்.

ஸ்பின்னராக ரஷீத் கானையும், ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா, டிரெண்ட் போல்ட் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளது. இந்த அணியில் பாட் கம்மின்ஸ், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்கு இடமில்லை. விஸ்டனின் பெஸ்ட் லெவனில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா, பும்ரா ஆகிய 4 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

விஸ்டனின் ஆல் ஃபார்மட் பெஸ்ட் லெவன்:

ரோஹித் சர்மா, டேவிட் வார்னர், விராட் கோலி(கேப்டன்), கேன் வில்லியம்சன், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரஷீத் கான், ஜோஃப்ரா ஆர்ச்சர், டிரெண்ட் போல்ட், பும்ரா.
 

PREV
click me!

Recommended Stories

ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!
அபிஷேக் சர்மா சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய ஹர்திக் பாண்ட்யா..! மின்னல் வேக அரை சதம்!