#ICCWTC ஃபைனலில் இந்தியா - நியூசிலாந்து மோதல்..! எந்த அணி வெல்லும்..? மைக்கேல் வான், அலெஸ்டர் குக் கணிப்பு

By karthikeyan VFirst Published Jun 17, 2021, 7:06 PM IST
Highlights

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து தான் வெற்றி பெறும் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன்கள் மைக்கேல் வான் மற்றும் அலெஸ்டர் குக் ஆகிய இருவரும் கணித்துள்ளனர்.
 

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. சவுத்தாம்ப்டனில் நாளை(18ம் தேதி) முதல் இந்த போட்டி நடக்கவுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி ஆகிய 2 அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால், போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.

ஃபைனலுக்கு முன், இங்கிலாந்துக்கு எதிராக ஆடிய 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என வென்றது நியூசிலாந்து அணிக்கு பெரும் உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளித்திருக்கிறது. இங்கிலாந்தில் இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து ஆடிய விதம், டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் நியூசிலாந்து தான் வெல்லும் என்று பல முன்னாள் ஜாம்பவான்கள் கருத்து கூற காரணமாக அமைந்தது.

அந்தவகையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்து அணி தான் வெற்றி பெறும் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன்கள் மைக்கேல் வான் மற்றும் அலெஸ்டர் குக் ஆகிய இருவரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய மைக்கேல் வான், நியூசிலாந்து அணி தான் ஜெயிக்கும். இந்தியாவிற்கு எதிராக நான் இப்படி கருத்து கூறியதற்கு, சமூக வலைதளங்களில் என் மீது வசைமழை பொழியப்படும் என்பது எனக்கு தெரியும். ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி ஆடிய விதம், அந்த அணியின் பலத்தை காட்டியது. ஹை க்ளாஸ் அணியாக உள்ளது நியூசிலாந்து. நியூசிலாந்து அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே மிகச்சிறப்பாக செயல்படுகிறது. சூழலுக்கு ஏற்ப முதிர்ச்சியுடன் பேட்டிங் ஆடுகிறார்கள் நியூசிலாந்து வீரர்கள். எனவே அந்த அணிக்கே வெற்றி வாய்ப்பு என்று மைக்கேல் வான் தெரிவித்தார்.

இதுகுறித்து பேசியுள்ள அலெஸ்டர் குக், நியூசிலாந்து அணி தான் வெற்றி பெறும். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடியது அந்த அணிக்கு பலமாக அமைந்துள்ளது. ஃபைனலுக்கு முன் அந்த தொடரில் ஆடியது, அழுத்தத்தை சமாளிக்க மற்றும் இங்கிலாந்து கண்டிஷனை புரிந்துகொள்ள அந்த அணிக்கு உதவியிருக்கும்.  அணி தேர்வு சரியாக இருக்க வேண்டும். இடது கை ஸ்பின்னர் அஜாஸ் படேலை அணியில் எடுப்பார்கள் என நினைக்கிறேன் என்று அலெஸ்டர் குக் தெரிவித்தார்.
 

click me!