#WIvsSA 2வது டெஸ்ட்: இதுலயாவது ஜெயிக்கணும்.. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸின் அதிரடி முடிவு

Published : Jun 18, 2021, 09:12 PM IST
#WIvsSA 2வது டெஸ்ட்: இதுலயாவது ஜெயிக்கணும்.. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸின் அதிரடி முடிவு

சுருக்கம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.  

தென்னாப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் இன்று செயிண்ட் லூசியாவில் தொடங்கியது.

மழை காரணமாக போட்டி தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதல் போட்டியில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்த போட்டியிலாவது வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி:

கிரைக் பிராத்வெயிட்(கேப்டன்), கீரன் பவல், ஷாய் ஹோப், கைல் மேயர்ஸ், ஜெர்மைன் பிளாக்வுட், ரோஸ்டன் சேஸ், ஜோஷுவா டா சில்வா(விக்கெட் கீப்பர்), ஜேசன் ஹோல்டர், கீமார் ரோச், ஜெய்டன் சீல்ஸ், ஷெனான் கேப்ரியல்.

தென்னாப்பிரிக்க அணி:

டீன் எல்கர்(கேப்டன்), மார்க்ரம், கீகன் பீட்டர்சன், வாண்டெர் டசன், கைல் வெரெய்ன், குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), வியான் முல்டர், கேஷவ் மஹராஜ், ரபாடா, நோர்க்யா, லுங்கி இங்கிடி.
 

PREV
click me!

Recommended Stories

ரஜினியின் வெறித்தனமான ரசிகர்! விஜய் ஸ்டைலில் கொண்டாட்டம்! வெங்கடேஷ் ஐயர் சொன்னது என்ன தெரியுமா?
IPL 2026 Points Table: 2 இடங்களுக்கு 5 அணிகள் போட்டி! டாப் கியரில் ஆர்சிபி.. தத்தளிக்கும் சிஎஸ்கே!