அவங்க 2 பேரும் இனிமேல் இந்திய அணியில் இடம்பெற சான்ஸ் இல்ல.. அவங்க கெரியர் முடிஞ்சுது..! கவாஸ்கர் அதிரடி

Published : Feb 21, 2022, 03:03 PM IST
அவங்க 2 பேரும் இனிமேல் இந்திய அணியில் இடம்பெற சான்ஸ் இல்ல.. அவங்க கெரியர் முடிஞ்சுது..! கவாஸ்கர் அதிரடி

சுருக்கம்

இந்திய டெஸ்ட் அணியின் சீனியர் வீரர்களான அஜிங்க்யா ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இருவரும் இனிமேல் இந்தியாவிற்காக ஆட வாய்ப்பில்லை என்று சுனில் கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.  

இலங்கைக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுவிட்டது. ரோஹித் சர்மா டெஸ்ட் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியில் ரஹானே, புஜாரா, இஷாந்த் சர்மா, ரிதிமான் சஹா ஆகிய சீனியர் வீரர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

ரஹானே, புஜாரா ஆகிய இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சரியாக ஆடாமல் சொதப்பிவருகின்றனர். மிடில் ஆர்டரில் அவர்களது மோசமான பேட்டிங், இந்திய அணியை கடுமையாக பாதிக்கிறது. போட்டியின் முடிவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி ஆகிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக அவர்கள் ஓரங்கட்டப்பட்டுவிட்டனர்.

அதேபோல இஷாந்த் சர்மா, ரிதிமான் சஹா ஆகிய சீனியர் வீரர்களும் இந்திய டெஸ்ட் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளனர். 

ரோஹித் சர்மா தலைமையில் எதிர்காலத்திற்கான வலுவான இந்திய அணி கட்டமைக்கப்படுகிறது. அதனால் சீனியர் வீரர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். சீனியர் வீரர்களை காரணமில்லாமல் ஓரங்கட்டவில்லை. இஷாந்த், சஹாவிற்கு அணியில் இடம் இல்லை. ஆனால் ரஹானே, புஜாரா ஆகிய இருவரும் சரியாக ஆடாததால் அவர்கள் தூக்கி எறியப்பட்டுள்ளனர். இந்திய அணிக்கு இவர்களது பங்களிப்பு தேவைப்பட்ட நேரத்திலும் ஏமாற்றமளித்தனர். அதனால் இந்திய அணி தோல்வியடைய நேரிட்டது. அதனால் தான் அடுத்தகட்டத்தை நோக்கிய தேடலில் இந்திய அணி இறங்கிவிட்டது.

இந்நிலையில், ரஹானே, புஜாரா ஆகிய இருவரும் இனிமேல் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறுவது கடினம் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், ரஹானே மற்றும் புஜாரா நீக்கப்படுவது ஏற்கனவே அறிந்த விஷயம் தான். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றிலாவது சதமோ அல்லது 80-90 ரன்களோ அடித்திருந்தால் அவர்களுக்கு மேலும் சில வாய்ப்பு கிடைத்திருக்கலாம். ரஹானேவாவது ஒரு நல்ல இன்னிங்ஸ் ஆடினார். ஆனால் இருவருமே போதுமான ரன் அடிக்கவில்லை. அணிக்கு தேவைப்பட்டபோது கூட ஸ்கோர் செய்யவில்லை. 

ரஞ்சி தொடரில் தொடர்ச்சியாக 200-250 ரன்கள் அடித்து, நல்ல ஃபார்மில் இருந்தால் மீண்டும் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. ஆனால் அது இப்போதைக்கு சாத்தியமில்லை. ரஹானே, புஜாரா ஆகிய இருவரும் சுமார் 35 வயதில் உள்ளனர். எனவே அவர்களது இடங்களில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்தால் கூட அணியின் எதிர்காலத்திற்கு நல்லது. எனவே புஜாராவும் ரஹானேவும் இனிமேல் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பது மிகக்கடினம் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!