ரிஷப் பண்ட்டின் தலையெழுத்து ஹர்திக் பாண்டியாவின் கையில்..! பெரும் குழப்பத்துக்கு கவாஸ்கர் சொல்லும் தீர்வு

By karthikeyan VFirst Published Oct 21, 2022, 2:43 PM IST
Highlights

டி20 உலக கோப்பையில் தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட் இருவருமே ஆடுவதற்கு சுனில் கவாஸ்கர் ஒரு வழி கூறியுள்ளார்.
 

டி20 உலக கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் இன்றுடன் முடியும் நிலையில், நாளை முதல் சூப்பர் 12 சுற்று போட்டிகள் தொடங்குகின்றன.வரும் 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி மெல்பர்னில் நடக்கிறது.

முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி கடந்த டி20 உலக கோப்பையில் அடைந்த தோல்விக்கு பழிதீர்ப்பதுடன், இந்த உலக கோப்பையை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷன் முடிவு செய்யப்பட்டுவிட்டது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கான ஆடும் லெவன் ஒரு வாரத்திற்கு முன்பே உறுதிசெய்யப்பட்டு வீரர்களிடம் தெரிவிக்கப்பட்டுவிட்டதாக கேப்டன் ரோஹித் சர்மா கூறியிருந்தார்.

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் - இதுதான் பேட்டிங் ஆர்டர். அக்ஸர் படேல், அஷ்வின், சாஹல் ஆகிய மூவரில் 2 ஸ்பின்னர்கள் ஆடுவார்கள். புவனேஷ்வர் குமார், ஷமி, அர்ஷ்தீப் சிங் ஆகிய மூவரும் ஃபாஸ்ட் பவுலர்களாக ஆடுவார்கள் என தெரிகிறது.

இதையும் படிங்க - பந்து தலையில் பட்டு மைதானத்திலேயே சுருண்டு விழுந்த அதிரடி வீரர்..! பாகிஸ்தான் அணிக்கு மரண அடி

தினேஷ் கார்த்திக் - ரிஷப்  பண்ட் ஆகிய 2 விக்கெட் கீப்பர்கள் அணியில் உள்ள நிலையில், இப்போதைக்கு தினேஷ் கார்த்திக் தான் முன்னிலை வகிக்கிறார். இந்திய அணியின் விக்கெட் கீப்பராக அவர்தான் ஆடவுள்ளார். ஃபினிஷிங் ரோலும் அவருடையதுதான். எனவே ரிஷப் பண்ட்டுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை.

ஆனால் இடது கை பேட்ஸ்மேன் ஒருவர் மிடில் ஆர்டரில் கண்டிப்பாக இருந்தாக வேண்டும் என்பது முன்னாள் ஜாம்பவான்களின் கருத்து. ஆனால் அவருக்கு ஆடும் லெவனில் இடம் இல்லை. ரிஷப் பண்ட்டை ஆடும் லெவனில் திணிக்க சுனில் கவாஸ்கர் ஒரு ஆலோசனை கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், இந்திய அணி 6 பவுலர்களுடன் ஆட நினைத்தால் ஹர்திக் பாண்டியா தான் 6வது பவுலர். எனவே ரிஷப் பண்ட்டுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்காது. ஆனால் ஹர்திக் பாண்டியா 5வது பவுலர் என்ற பொறுப்பை ஏற்றால், தினேஷ் கார்த்திக்குடன் சேர்த்து ரிஷப் பண்ட்டுக்கும் இடம் கிடைக்கும். ரிஷப் பண்ட் 6ம் வரிசையிலும், தினேஷ் கார்த்திக் 7ம் வரிசையிலும் பேட்டிங் ஆடலாம். காம்பினேஷன் என்னவாக இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

மிடில் ஆர்டரில் கண்டிப்பாக ஒரு இடது கை பேட்ஸ்மேன் தேவை. டாப் 4 பேட்ஸ்மேன்கள் செம ஃபார்மில் உள்ளனர். எனவே ரிஷப் பண்ட் ஆடினாலும் அவருக்கு எத்தனை ஓவர் பேட்டிங் ஆட கிடைக்கும்? 3-4 ஓவர்கள் கிடைக்கலாம். அந்த 3-4 ஓவர்களை ஆட தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் யார் சிறந்தவர் என்றெல்லாம் யோசிக்கப்படும் என்று கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: 2 முறை சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் தகுதிச்சுற்றுடன் வெளியேறியது! அயர்லாந்திடம் படுதோல்வி

ஆனால் கேப்டன் ரோஹித் ஹர்திக் பாண்டியாவை 5வது பவுலராக ஆடவைக்க விரும்பமாட்டார். ஏனெனில் ஒரு பவுலர் அடிவாங்கும் பட்சத்தில் கூடுதல் பவுலிங் ஆப்சன் இல்லாதது பெரும் பின்னடைவாகவும் பாதிப்பாகவும் அமைந்துவிடும். அதனால் அதை செய்ய வாய்ப்பேயில்லை. எனவே ரிஷப் பண்ட்டுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவும் வாய்ப்பில்லை

click me!