இந்தியா ஜெயிச்சுருக்கலாம்.. ஆனாலும் டீம்ல பெரிய பிரச்னை ஒண்ணு இருக்கு! ரோஹித்,டிராவிட்டை எச்சரிக்கும் கவாஸ்கர்

By karthikeyan VFirst Published Feb 27, 2022, 6:33 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணியை வென்றிருந்தாலும், இந்திய அணியில் இருக்கும் ஒரு பெரிய பிரச்னையை சுட்டிக்காட்டியுள்ளார்  சுனில் கவாஸ்கர்.
 

இலங்கைக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி டி20 தொடரை 2-0 என வென்றுவிட்டது. 

முதல் டி20 போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்திலும், 2வது போட்டியில் 184 ரன்கள் என்ற சவாலான இலக்கை 18வது ஓவரிலேயே அடித்தும் அபார வெற்றி பெற்றது இந்திய அணி.

இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை வென்றிருந்தாலும், பிரச்னைக்குரியா விஷயங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார் சுனில் கவாஸ்கர். இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், ஷனாகாவும் நிசாங்காவும் அபாரமாக விளையாடினார்கள்.டெத் ஓவர்களில் இந்திய அணி 80-90 ரன்களை விட்டுக்கொடுத்தது. பும்ராவின் பவுலிங்கை அடித்து ஆடுவது கடினம். ஆனால் நிசாங்கா அபாரமாக அடித்து ஆடினார். இந்திய அணியின் டெத் பவுலிங் கவலைக்குரிய விதமாக உள்ளது. எனவே டெத் பவுலிங்கை இந்திய அணி மேம்படுத்த வேண்டும் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா - இலங்கை இடையேயான 2வது டி20 போட்டியில் கடைசி 4 ஓவர்களில் இலங்கை அணி 72 ரன்களை குவித்தது. டெத் ஓவர்களில் இந்திய அணி இவ்வளவு அதிகமான ரன்களை விட்டுக்கொடுப்பது நல்லதல்ல. அதைத்தான் கவாஸ்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

click me!