India vs Sri Lanka: முதல் 2 போட்டிகளில் ஆடாத வீரர்களுக்கு 3வது டி20-யில் வாய்ப்பு..! உத்தேச இந்திய அணி

Published : Feb 27, 2022, 03:53 PM IST
India vs Sri Lanka: முதல் 2 போட்டிகளில் ஆடாத வீரர்களுக்கு 3வது டி20-யில் வாய்ப்பு..! உத்தேச இந்திய அணி

சுருக்கம்

இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

இந்தியா - இலங்கை இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டி20 போட்டி இன்று தர்மசாலாவில் நடக்கிறது.

இந்திய அணி இந்த தொடரை ஏற்கனவே வென்றுவிட்டதால், கடைசி டி20 போட்டிக்கான இந்திய அணியில் முதலிரண்டு போட்டிகளில் ஆடாத சில வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. ஏனெனில் கேஎல் ராகுல், விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அணியில் இல்லாததால், இருக்கிற பேட்டிங் ஆர்டரில் தான் இந்திய அணி இறங்கும். இஷான் கிஷனுடன் சஞ்சு சாம்சனை தொடக்க வீரராக இறக்கிவிட்டு ரோஹித் சர்மா 4ம் வரிசையிலோ அதன்பின்னரோ இறங்க வாய்ப்புள்ளது. 3ம் வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயர், மிடில் ஆர்டர் ஜடேஜா, தீபக் ஹூடா, வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் ஆடுவதில் எந்த மாற்றமும் இருக்காது. 

பவுலர்களில் துணை கேப்டன் பும்ராவை தவிர மற்ற அனைவருமே மாற்றப்பட வாய்ப்புள்ளது. புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல் ஆகிய இருவருக்கு பதிலாக ஆவேஷ் கான் மற்றும் முகமது சிராஜ் ஆகிய இருவரும், ஸ்பின்னர் சாஹலுக்கு பதிலாக ரவி பிஷ்னோய் - குல்தீப் யாதவ் ஆகிய இருவரில் ஒருவரும் சேர்க்கப்படலாம்.

3வது டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி:

சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், ரோஹித் சர்மா (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, தீபக் ஹூடா, வெங்கடேஷ் ஐயர், ஆவேஷ் கான், முகமது சிராஜ், ரவி பிஷ்னோய்/குல்தீப் யாதவ், பும்ரா (துணை கேப்டன்).
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Suryakumar Yadav: 'டீம்ல இருந்து தூக்குனதும் ஷாக் ஆகிட்டேன்' - சூர்யகுமார் யாதவ் ஓபன் டாக்!
WTC Final Race: ஆஸி, தென்னாப்பிரிக்கா முன்னிலை.. இந்தியாவுக்கு இன்னும் சான்ஸ் இருக்கா?