டி20 கிரிக்கெட்டில் ஒரு கேப்டனாக ரோஹித் சர்மா படைத்த அபார சாதனை.! மோர்கன், வில்லியம்சனை தூக்கியடித்து முதலிடம்

By karthikeyan VFirst Published Feb 27, 2022, 2:46 PM IST
Highlights

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் அதிக வெற்றிகளை குவித்த கேப்டன் என்ற அபாரமான சாதனையை படைத்துள்ளார் ரோஹித் சர்மா.
 

ரோஹித் சர்மா இந்திய அணியின் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற பின்னர், நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 2 அணிகளையும் டி20 தொடரில் ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்ற இந்திய அணி, இலங்கை அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரையும் 2-0 என வென்றுள்ளது. 3வது டி20 போட்டி இன்று நடக்கவுள்ள நிலையில், இதிலும் வெற்றி பெற்று, மற்றுமொரு டி20 தொடரை முழுமையாக வெல்லும் வாய்ப்புள்ளது.

இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 183 ரன்கள் அடிக்க, 184 ரன்கள் என்ற இலக்கை 18வது ஓவரின் முதல் பந்திலேயே அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி.

இது ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் இந்திய மண்ணில் 16வது சர்வதேச டி20 வெற்றி. இந்திய மண்ணில் 17 சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தியுள்ள கேப்டன் ரோஹித் சர்மா அவற்றில் 16 வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். இதுதான் சொந்த மண்ணில் ஒரு கேப்டன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பெற்ற அதிகபட்ச வெற்றி.

இங்கிலாந்து கேப்டன் ஒயின் மோர்கன் மற்றும் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஆகிய இருவரும் டி20 கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் 15 வெற்றிகளை பெற்றுள்ளனர். அவர்களுடன் இணைந்திருந்த ரோஹித் சர்மா, இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம், அவர்களை பின்னுக்குத்தள்ளி 16 வெற்றிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். 

ஏற்கனவே தனது கேப்டன்சியில் 4 முறை எதிரணிகளை ஒயிட்வாஷ் செய்து டி20 தொடரை வென்றுள்ள கேப்டன் ரோஹித் சர்மா, இலங்கைக்கு எதிரான இன்றைய கடைசி டி20 போட்டியிலும் வெற்றி பெற்றால் 5வது முறையாக எதிரணியை ஒயிட்வாஷ் செய்த சாதனையை படைப்பார்.
 

click me!