டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி தேர்வை விமர்சித்த முன்னாள் வீரர்களுக்கு சுனில் கவாஸ்கர் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள நிலையில், டி20 உலக கோப்பைக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது.
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி:
undefined
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்ஸர் படேல், ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.
ஸ்டாண்ட்பை வீரர்கள் - முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர்.
இதையும் படிங்க - T20 World Cup: கோலி - ராகுல் இவர்களில் யார் தனது ஓபனிங் பார்ட்னர்..? கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்
இந்திய அணி தேர்வு குறித்து விமர்சனங்கள் எழுந்தன. ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் ஆகியோரை இந்திய அணியில் எடுக்காதது குறித்து விமர்சனங்கள் எழுந்தன. முகமது அசாருதீன், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், திலீப் வெங்சர்க்கார் ஆகியோர் அணி தேர்வு குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
ஷமியை எடுத்திருக்க வேண்டும் என்று ஸ்ரீகாந்த் கூறியிருந்தார். தீபக் ஹூடா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோருக்கு பதிலாக முறையே ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் முகமது ஷமி ஆகிய இருவரையும் எடுத்திருக்க வேண்டும் என்று முகமது அசாருதீன் கருத்து கூறியிருந்தார்.
முகமது ஷமி, உம்ரான் மாலிக் மற்றும் ஷுப்மன் கில் ஆகிய மூவரையும் டி20 உலக கோப்பைக்கான அணியில் எடுத்திருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்கார் கருத்து கூறியிருந்தார்.
இந்திய அணி தேர்வு குறித்த பல முன்னாள் வீரர்கள் அதிருப்தி தெரிவித்துவரும் நிலையில், அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் சுனில் கவாஸ்கர்.
இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் இருவரில் யாருக்கு ஆடும் லெவனில் இடம்..? கௌதம் கம்பீர் கருத்து
இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், இந்த அணியின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. அந்த குறிப்பிட்ட நாளில் டிராபியை தூக்க எந்த அணிக்கும் கொஞ்சம் அதிர்ஷ்டம் முக்கியம். இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுவிட்டால், அதுதான் நமது அணி. அதற்கு நமது முழு ஆதரவையும் அளிக்க வேண்டும். அணி தேர்வு குறித்து கேள்வி எழுப்பவோ விமர்சனம் செய்யவோ கூடாது. அப்படி செய்தால், அது அணியில் தேர்வு செய்யப்பட்ட வீரர்களின் தன்னம்பிக்கையை சிதைக்கும் என்று கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.