IND vs AUS: முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

Published : Sep 18, 2022, 04:58 PM IST
IND vs AUS: முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. டி20 உலக கோப்பைக்கு முன் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்குமே இது சிறந்த முன் தயாரிப்பாக இருக்கும்.

வரும் 20, 23 மற்றும் 25 ஆகிய தேதிகளில் முறையே மொஹாலி, நாக்பூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடக்கிறது. இந்த தொடரில் இடம்பெற்றிருந்த சீனியர் ஃபாஸ்ட் பவுலர் முகமது ஷமி கொரோனா பாசிட்டிவ் ஆனதால் இந்த தொடரிலிருந்து விலகிவிட்டார். அவருக்கு பதிலாக மற்றொரு சீனியர் ஃபாஸ்ட் பவுலரான உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க - கொரோனா காரணமாக ஆஸி., டி20 தொடரிலிருந்து விலகினார் முகமது ஷமி..! மாற்று வீரராக சீனியர் பவுலர் அறிவிப்பு

முதல் டி20 போட்டி நாளை மறுநாள் (20ம் தேதி) மொஹாலியில் நடக்கும் நிலையில், அந்த போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

இதையும் படிங்க - T20 World Cup: கோலி - ராகுல் இவர்களில் யார் தனது ஓபனிங் பார்ட்னர்..? கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்

ஆஸி.,க்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஸர் படேல், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

T20 World Cup 2026: வங்கதேச அணி இந்தியா வருவதை தடுத்தது பாகிஸ்தான்.. பிசிசிஐ பகீர் குற்றச்சாட்டு!
டி20 உலகக் கோப்பைக்கு கடப்பாரை டீமை களமிறக்கிய வெஸ்ட் இண்டீஸ்.. சிக்சர் மழைக்கு ரெடியா?