கொரோனா காரணமாக ஆஸி., டி20 தொடரிலிருந்து விலகினார் முகமது ஷமி..! மாற்று வீரராக சீனியர் பவுலர் அறிவிப்பு

By karthikeyan VFirst Published Sep 18, 2022, 2:32 PM IST
Highlights

கொரோனா காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரிலிருந்து  விலகியுள்ளார் முகமது ஷமி.
 

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. டி20 உலக கோப்பைக்கு முன் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்குமே இது சிறந்த முன் தயாரிப்பாக இருக்கும்.

வரும் 20, 23 மற்றும் 25 ஆகிய தேதிகளில் முறையே மொஹாலி, நாக்பூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடக்கிறது. டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறாத முகமது ஷமி, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான தொடர்களில் ஆடவிருந்தார்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் இருவரில் யாருக்கு ஆடும் லெவனில் இடம்..? கௌதம் கம்பீர் கருத்து

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் வரும் 20ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், முகமது ஷமிக்கு கொரோனா உறுதியானது. அதனால் இந்த டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரராக மற்றொரு சீனியர் ஃபாஸ்ட் பவுலரான உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க -  ரமீஸ் ராஜாவுக்கு புடிக்கும்னு அந்த பையனைலாம் டீம்ல எடுத்து வச்சுருக்காங்க! பாக்., அணியை விளாசிய முன்னாள் வீரர்

ஆஸ்திரேலிய டி20 தொடருக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்ஸர் படேல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்ப்ரித் பும்ரா, உமேஷ் யாதவ்.
 

click me!