ரமீஸ் ராஜாவுக்கு புடிக்கும்னு அந்த பையனைலாம் டீம்ல எடுத்து வச்சுருக்காங்க! பாக்., அணியை விளாசிய முன்னாள் வீரர்

By karthikeyan VFirst Published Sep 17, 2022, 10:22 PM IST
Highlights

டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணி தேர்வு மீது விமர்சனங்கள் வலுத்துவருகிறது. முன்னாள் வீரர் சயீத் அஜ்மலும் பாகிஸ்தான் அணி தேர்வை விமர்சித்துள்ளார்.
 

டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், டி20 உலக கோப்பைக்கான அணிகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன.

பாபர் அசாம் தலைமையிலான 15 வீரர்களை கொண்ட பாகிஸ்தான் அணியும் அறிவிக்கப்பட்டுவிட்டது. பாகிஸ்தான் அணியில் அதிரடி வீரர் ஃபகர் ஜமான் மெயின் அணியில் இடம்பிடிக்கவில்லை. காயம் காரணமாக அவர் ஸ்டாண்ட்பை வீரராக எடுக்கப்பட்டுள்ளார். ஆசிய கோப்பையில் அசத்திய ஷாநவாஸ் தஹானியும் ஸ்டாண்ட்பை வீரராக எடுக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க - அவர் ஒருவர் போதும்.. டி20 உலக கோப்பை இந்திய அணிக்குத்தான்..! அடித்துக்கூறும் ஜெயவர்தனே

ஆசிய கோப்பையில் காயம் காரணமாக ஆடிராத ஃபாஸ்ட் பவுலர் ஷாஹீன் அஃப்ரிடி காயத்திலிருந்து மீண்டதால் பாகிஸ்தான் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். ஷாஹீன் அஃப்ரிடி அணிக்கு திரும்பியது அந்த அணிக்கு கூடுதல் பலம். ஆசிய கோப்பையில் ஆடிராத ஹைதர் அலியும் அணியில் எடுக்கப்பட்டுள்ளார்.

டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணி:

பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான் (துணை கேப்டன்), ஆசிஃப் அலி, ஹைதர் அலி, ஹாரிஸ் ராஃப், இஃப்டிகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம், நசீம் ஷா, ஷாஹீன் அஃப்ரிடி, ஷான் மசூத், உஸ்மான் காதிர். 

ரிசர்வ் வீரர்கள் - ஃபகர் ஜமான், முகமது ஹாரிஸ், ஷாநவாஸ் தஹானி.

டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணி தேர்வு கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. சீனியர் வீரர் ஷோயப் மாலிக் புறக்கணிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பந்து நன்றாக பவுன்ஸ் ஆகும். ஸ்பின்னிற்கு பெரிதாக ஒத்துழைப்பு இருக்காது. ஆனால் ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு நல்ல ஒத்துழைப்பு இருக்கும். அப்படியிருக்கையில், ஃபாஸ்ட் பவுலர் ஷாநவாஸ் தஹானியை ஸ்டாண்ட்பை வீரராக மட்டுமே எடுத்துவிட்டு, ரிஸ்ட் ஸ்பின்னர் உஸ்மான் காதிரை மெயின் அணியில் எடுத்தது கடும் விமர்சனத்துக்குள்ளானது. உஸ்மான் காதிர் கேப்டன் பாபர் அசாமின் நண்பர் என்பதால் அவரை அணியில் எடுத்திருப்பதாக விமர்சிக்கப்படுகிறது.

அதேபோல இளம் வீரர் முகமது ஹாரிஸின் தேர்வும் விமர்சனம் செய்யப்படுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜாவுக்கு பிடித்த வீரர் என்பதால் அவரை அணியில் எடுத்திருப்பதாக முன்னாள் வீரர் சயீத் அஜ்மல் விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்

இதுகுறித்து கருத்து கூறிய சயீத் அஜ்மல், முகமது ஹாரிஸை ரமீஸ் ராஜாவுக்கு பிடிக்கும். ஹாரிஸ் ரமீஸ் ராஜாவின் சாய்ஸ். அதனால் தான் அவர் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். உள்நாட்டு டி20 தொடரில் சர்ஃபராஸ் அகமது அருமையாக ஆடியிருக்கிறார். அவரை கண்டிப்பாக அணியில் எடுத்திருக்க வேண்டும். ஆனால் பாகிஸ்தான் அணி தேர்வு பாரபட்சமாக அமைந்துள்ளது என்று சயீத் அஜ்மல் விமர்சித்துள்ளார்.
 

click me!